அதிமுகவின் 3வது தலைமுறை நீங்கள்தான்.. பல்லாண்டு காலம் நீடுடி வாழ வேண்டும்.. சசிகலா பேசும் ஆடியோ வைரல்.!

Published : Aug 17, 2021, 01:29 PM IST
அதிமுகவின் 3வது தலைமுறை நீங்கள்தான்.. பல்லாண்டு காலம் நீடுடி வாழ வேண்டும்.. சசிகலா பேசும் ஆடியோ வைரல்.!

சுருக்கம்

கொரோனா கட்டுப்பாடுகளை மதித்து நடக்க வேண்டும். அவரவர்கள் தங்களது பகுதியிலேயே கோயில்களில் பூஜை செய்யுங்கள். ஏழை மக்களுக்கு உதவி செய்யுங்கள். அதுதான் எனக்கு மகிழச்சியாக இருக்கும். ஜெயலலிதாதற்போது இல்லை என்பதால் பிறந்த நாள் கொண்டாடுவதில்லை.

தன்னுடைய பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்றும், மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குமாறு ஆதரவாளர்களை சசிகலா கேட்டுக் கொண்டுள்ளார்.

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விடுதலையான சசிகலா அவ்வப்போது அதிமுகவினர் மற்றும் அமமுகவினரிடம் செல்போனில் பேசி வருகிறார். இது சமூகவலைதளங்களில்  வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தை சேர்ந்த ரூபம் வேலவனிடம் சசிகலா பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. முதலில் இருவரும் நலம் விசாரித்துக் கொள்கின்றனர். 

வேலவன்: உங்களது பிறந்த நாளில் நாளை உங்களை சந்திக்க வேண்டுமென மிகுந்த ஆசையுடன் இருக்கிறோம். ஆனால், கொரோனா கட்டுப்பாடு காரணமாக உங்களை பார்க்க முடியவில்லை.

சசிகலா: கொரோனா கட்டுப்பாடுகளை மதித்து நடக்க வேண்டும். அவரவர்கள் தங்களது பகுதியிலேயே கோயில்களில் பூஜை செய்யுங்கள். ஏழை மக்களுக்கு உதவி செய்யுங்கள். அதுதான் எனக்கு மகிழச்சியாக இருக்கும். ஜெயலலிதாதற்போது இல்லை என்பதால் பிறந்த நாள் கொண்டாடுவதில்லை. தொண்டர்கள் விருப்பப்பட்டால் பாதுகாப்புடன் பொதுமக்களுக்கு உதவி செய்யுங்கள். 

வேலவன்: அதிமுகவின் 3வது தலைமுறை நீங்கள்தான், தொண்டர்களை நலனை காப்பதற்கான நீங்கள் பல்லாண்டு காலம் நீடுடி வாழ வேண்டும். உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன். விரைவில் உங்களை எனது குடும்பத்துடன் சந்திக்க வேண்டும். 

சசிகலா: கொரோனா முடிந்ததும் கண்டிப்பாக சந்திக்கலாம். வீட்டில் உள்ள அனைவரையும் கேட்டதாக கூறுங்கள். இவ்வாறு உரையாடல் நடந்தது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளராக இருந்த ரூபம் வேலவனிடம் சசிகலா பேசினார். அதன் பின்னர் அவர் அதிமுகவில் நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

PREV
click me!

Recommended Stories

இந்தியா முழுவதும் பாகிஸ்தான் கொடியை ஏற்றுவோம்...! யாராலும் எங்களை தடுக்க முடியாது..! LET பயங்கரவாதி கொக்கரிப்பு..!
ஊராட்சி செயலாளர் பணியிலும் மோசடி..! திமுக அரசில் ஊழல் நடைபெறாத துறையே இல்லை..! அண்ணாமலை ஆவேசம்..!