புலம் பெயர் தொழிலாளர்களுக்கு எந்த உதவியும் செய்யாத மோடி அரசு.!புதுச் சேரி முதல்வர் நாராயணசாமிகுற்றச்சாட்டு.!!

By T BalamurukanFirst Published May 27, 2020, 7:56 AM IST
Highlights

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மத்திய அரசு எந்த உதவியும் செய்யவில்லை என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். ஊரடங்கை நீட்டிப்பதில் மட்டுமே அரசு கவனம் செலுத்துகிறது. பொருளாதாரத்தை மீட்க மத்திய அரசிடம் எந்த திட்டமும் இல்லை குற்றம் சாட்டியிருக்கிறார்.
 

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மத்திய அரசு எந்த உதவியும் செய்யவில்லை என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். ஊரடங்கை நீட்டிப்பதில் மட்டுமே அரசு கவனம் செலுத்துகிறது. பொருளாதாரத்தை மீட்க மத்திய அரசிடம் எந்த திட்டமும் இல்லை குற்றம் சாட்டியிருக்கிறார்.

நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிமாநில தொழிலாளர்கள் வேலையின்றி வருமானம் இல்லாமல் உணவுக்கே கையேந்தும் நிலை ஏற்பட்டது. இதனால் அவரவர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்பினர்.
உத்திரபிரதேசம் மத்திய பிரதேசம் சிக்கிம் ஆந்திரா பீகார் நோக்கி கால்நடையாக புலம் பெயர் தொழிலாளர்கள் குடும்பம் குடும்பமாக தங்களை பிள்ளைகளையும் உடமைகளையும் தலையில் சுமந்தபடியே நடக்க தொடங்கினர். இதனால் செல்லும் வழியில் ஆங்காங்கே சாலை விபத்துக்கள் ஏற்பட்டதில் பலர் உயிரிழந்தனர். சிலர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தனர். உயிரிழந்த ஒருவர் உடலை நடுரோட்டில் இறக்கிவைத்து விட்ட சம்பவம் இன்னும் நம் கண்களை விட்டு அகலவில்லை.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி பிரமுகர் பிரியங்கா மற்றும் ராகுல் காந்தியும் வெளி மாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர் செல்ல ஆயிரம் பஸ்களை தருகிறோம் ஏற்றுக்கொள்ளுங்கள் என்று உத்திரபிரதேச மாநில அரசுக்கு கோரிக்கை வைத்தது. அந்த கோரிக்கை பரிசீலனையில் இருந்ததால் பாஜக படம் கூட அந்த பஸ்களில் போட்டுக்கொள்ளுங்கள். முதலில் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்புங்க என்று குரல் கொடுத்தார் பிரியங்கா காந்தி.


அந்த ஆயிரம் பஸ்களை அனுப்பிய வாகன பட்டியலில் மினிலாரி ஆட்டோ ஆகிய நம்பர்களை கொடுத்திருப்பதை கண்டுபிடித்து காங்கிரஸ் முகத்தில் கரியை பூசியது பாஜக. இந்த நிலையில் பாண்டிச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி புலம் பெயர் தொழிலாளர்களுக்கு மத்திய அரசு எதுவுமே செய்யவில்லை எனக் குற்றம் சாட்டியிருக்கிறார்.

click me!