தமிழகத்தில் பள்ளிகள் ஆகஸ்ட் மாதம் திறப்பதற்காக அமைச்சர் செங்கோட்டையன் தீவிர ஆலோசனை.!!

Published : May 26, 2020, 10:55 PM IST
தமிழகத்தில் பள்ளிகள் ஆகஸ்ட் மாதம் திறப்பதற்காக அமைச்சர் செங்கோட்டையன் தீவிர ஆலோசனை.!!

சுருக்கம்

ஆகஸ்ட் மாதம் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படலாம் என்று கல்வித்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதற்கான ஆலோசனையில் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவநிபுணர் குழுவினருடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனையை தொடங்கினார்.ஏற்கனவே பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பாதுகாப்பு குறித்து மருத்துவ நிபுணர் குழுவினருடனான ஆலோசனை நிறைவடைந்தது. இந்த நிலையில் பொதுத்தேர்வு முடிவடைந்ததும் எப்போது பள்ளிகள் திறக்கலாம் என்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன், பள்ளி கல்வித்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை கேட்டு வருகிறார்.

இந்நிலையில், 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடும் பணிகள் ஜூலை இறுதிவரை இருக்கும் எனத் தெரிகிறது.மேலும், ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புகள் வரை துவங்கப்படும் எனவும் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலையிலும்.9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பிற்பகலிலும் வகுப்புகள் துவங்கப்படும் என தெரிகிறது. 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 1 முதல் வகுப்புகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!
Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?