தமிழகத்தில் கொரோனா இல்லை...! ஊரடங்கு போட்டதே தவறு... தடதடக்கும் நடிகர் மன்சூர் அலிகான்.!!

Published : May 26, 2020, 10:36 PM ISTUpdated : May 27, 2020, 08:57 AM IST
தமிழகத்தில் கொரோனா இல்லை...! ஊரடங்கு போட்டதே தவறு... தடதடக்கும் நடிகர் மன்சூர் அலிகான்.!!

சுருக்கம்

கொரோனாவை பார்த்து நாம் பயப்படவேண்டிய அவசியம் இல்லை. ஏன், தமிழகத்தில் கொரோனா ஒன்றுமே இல்லை, என்பது தான் என் கணிப்பு. நம் மூதாதையரின் வைத்தியமே கொரோனாவை 100 சதவீதம் குணப்படுத்திவிடும்.இதற்காக ஊரடங்கு போட்டிருக்க வேண்டியதில்லை என நடிகர் மன்சூர்அலிகான் தன்னுடைய ஸ்டைலில் பேசியிருக்கிறார்.  

நடிகரும் தயாரிப்பாளருமான மன்சூரலிகான் விடுத்துள்ள அறிக்கையில், “தட்டம்மை, தடுப்பம்மை போன்றவற்றை குழந்தை பருவத்திலேயே எதிர்கொண்டு நம் உடல் வலிமை பெற்று இருக்கிறது. மேலும், நமது உணவு பழக்கங்களால் நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி என்பது இயற்கையிலேயே அதிகமாக உள்ளது.

கொரோனாவை பார்த்து நாம் பயப்படவேண்டிய அவசியம் இல்லை. ஏன், தமிழகத்தில் கொரோனா ஒன்றுமே இல்லை, என்பது தான் என் கணிப்பு. நம் மூதாதையரின் வைத்தியமே கொரோனாவை 100 சதவீதம் குணப்படுத்திவிடும். சளி, இருமல் போன்றவைகள் வந்தால், சுக்கு, மிளகு, இஞ்சி போன்றவற்றை கொதிக்க வைத்து குடித்தால், இரண்டு நாட்களிலேயே சலி காணாமல் போய்விடுகிறது. மேலும், தூதுவளை உள்ளிட்ட ஏகப்பட்ட இயற்கை மருத்துவம் நம் கையில் இருக்கிறது.

இப்படி சலி மற்றும் காய்ச்சலை வைத்து வரும் கொரோனாவையும், நம் உணவு பழக்கம் மூலம் நாம் எளிதாக எதிர்கொள்ள முடியும். ஆனால், நம் நாட்டு அரசு, மேலை நாட்டினரை பார்த்து பயந்து ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது. ஊரடங்கே இங்கே போட்டிருக்க கூடாது என்பது தான் என் கருத்து. இதனால், ஏழை எளியவர்களின் வாழ்வாதாரமும், வாழ்வும் கேள்விக்குறியாகி இருப்பதோடு, நாடே மிகப்பெரிய பொருளாதார சிக்கலில் இருக்கிறது.

பல துறைகள் மீண்டும் பழையபடி செயல்பட உத்தரவு விட வேண்டும், என்று மத்திய மற்றும் மாநில அரசுகளை தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன். அதேபோல், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் மற்றும் கோவில்களையும் திறக்க வேண்டும், என்றும் கேட்டுக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
 
PREV
click me!

Recommended Stories

அரசு பேருந்துகளில் 'தமிழ்நாடு' எங்கே?.. இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக மீது சீமான் அட்டாக்!
திமுகவிற்கு இடியை இறக்கிய கிறிஸ்தவர்கள்..! 234 தொகுதிகளிலும் முழு ஆதரவு என பேச்சு