புறம்போக்கு களவாணி பயலுக.. ஓசி சோறு வீரமணி.. ஆ.ராசாவுக்கு வக்காலத்து வாங்கிய வீரமணியை ரவுண்டு கட்டிய பாஜக.!

By vinoth kumarFirst Published Sep 20, 2022, 6:30 AM IST
Highlights

ஆ.ராசா மீது வழக்குப் போட்டு அவரை நீதிமன்றத்துக்கு அழைத்தாலும், அதை எதிர்கொண்டு மனுதர்மம், கீதை போன்ற சாதியை வலியுறுத்தும், பெண்களைக் கொச்சைப்படுத்தும் பல இந்து மத சாஸ்திரங்கள், தர்ம விளக்கம் பற்றி நீதிமன்றத்திலேயே அலசி சுட்டிக்காட்ட அவரும் தயார். 

ஒன்றுக்கும் உதவாத ஒரு கேடு கெட்ட சமூக விரோதி வீரமணிக்கு கீதை குறித்து பேச எந்த தகுதியும், அருகதையும் இல்லை என  நாராயணன் திருப்பதி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இதுகுறித்து பாஜக மாநிலத்துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்;- அ.ராசா மீது வழக்குப் போட்டு அவரை நீதிமன்றத்துக்கு அழைத்தாலும், அதை எதிர்கொண்டு மனுதர்மம், கீதை போன்ற சாதியை வலியுறுத்தும், பெண்களைக் கொச்சைப்படுத்தும் பல இந்து மத சாஸ்திரங்கள், தர்ம விளக்கம் பற்றி நீதிமன்றத்திலேயே அலசி சுட்டிக்காட்ட அவரும் தயார். அவர் சார்பில் பெரியார் தொண்டர்களாகிய நாமும் தயார். கருத்தை கருத்தால் சந்திக்கத் திராணி இல்லாத தில்லுமுல்லு திருகுதாளப் பேர்வழிகளே, உங்கள் வித்தைகள் பெரியார் மண்ணில் எடுபடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது" : கி. வீரமணி.

இதையும் படிங்க;- ‘மன்னிப்பு கேட்க நான் தயார், ஆனா ஒரு கண்டிஷன்’ - பாஜகவை வெளுத்து வாங்கிய ஆ.ராசா!

ஆன்மீக பூமியான தமிழகத்தில் ஹிந்து மதம் குறித்து தரக்குறைவாக விமர்சனம் செய்வதற்கு எந்த 'புறம்போக்குக்கும், களவாணி பயலுக்கும்' அருகதை இல்லை. "காலம் காலமாக திமுகவிலும், அதிமுகவிலும் ஓசி சோறு உண்ணும் வீரமணி இதை பற்றி பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை" என்று 14/08/2018 அன்று நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அண்ணன் மகன்  தயா அழகிரி கூறியது இப்போது பொருந்துகிறது. ஒன்றுக்கும் உதவாத ஒரு கேடு கெட்ட சமூக விரோதி வீரமணிக்கு கீதை குறித்து பேச எந்த தகுதியும், அருகதையும் இல்லை.

(குறிப்பு : புறம்போக்கு என்ற சொல் அரசாங்க கெஜட்டிலேயே உள்ளது என்றும், களவாணி எனும் சொல் அநாகரீகமானது அல்ல, சட்ட சபை குறிப்பிலேயே உள்ளன, அதனால் நான் பேசியதில் எந்த தவறும் இல்லை என்று நம் முதல்வரும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான .மு.க.ஸ்டாலின் அவர்கள் ஜனவரி 28,2018  அன்று பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க;-  ஆ.ராசாவை கைவிட்ட திமுக.!ஆதரவாக சீமானை தொடர்ந்து களத்தில் இறங்கிய வேல்முருகன்.. இந்து அமைப்புகளுக்கு எச்சரிக்கை

click me!