முருகனுக்கு 2 மனைவியா? 3 மனைவியா? அமைச்சரின் பேச்சுக்கு கருணாநிதியை சுட்டிக்காட்டி தரமான பதிலடி கொடுத்த பாஜக

By vinoth kumarFirst Published May 25, 2023, 11:34 AM IST
Highlights

நிகழ் காலத்தில் இல்லாத சான்றுகளா? திராவிட மாடலில் இல்லாத ஒப்பீடுகளா? சாதாரணமாக, கிண்டலாக, ஜோவியலாக உங்கள் தலைவர் கருணாநிதி அவர்களையே குறிப்பிட்டிருந்தால் அனைவருக்கும் எளிதாக புரிந்திருக்குமே?

தமிழ் கடவுள் முருகன் குறித்து தமிழக அமைச்சர் பன்னீர்செல்வம் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதற்கு பாஜக தரப்பில் தரமான பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. 

கோவையில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் சர்வதேச சிறுதானிய கருத்தரங்கு மற்றும் எதிர்காலம் சார்ந்த சிறுதானிய உணவுப் பொருட்கள் கண்காட்சி நடந்தது. இதில் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் பங்கேற்று துவக்கி வைத்தார். அப்போது, பேசிய அமைச்சர்;-  முருகன் சர்க்கரை வியாதி வரக்கூடாது என்பதற்காக திணையை சாப்பிட்டார்.  அவர் இரண்டு திருமணம் செய்து கொண்டார். இரண்டா அல்லது மூன்றா? ஆமாம் சாமி இரண்டு திருமணம் தான். அந்த காலத்திலேயே ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக முருகன் தினை மாவு சாப்பிட்டார் என சொல்லிக் கொண்டே வந்தவர் கூட்டத்தில் சலசலப்பு ஏற்படுவதை அறிந்த உடனே கிண்டலாக ஜோதியலாக பேசுகிறேன் என்று சமாளித்தார். அமைச்சரின் இந்த பேச்சு சர்ச்சையானது. 

இந்நிலையில், கிண்டலாக, ஜோவியலாக உங்கள் தலைவர் கருணாநிதி அவர்களையே குறிப்பிட்டிருந்தால் அனைவருக்கும் எளிதாக புரிந்திருக்குமே? என  நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். 

இதுதொடர்பாக தமிழக பாஜக மாநிலத்துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- கடவுள் முருகர் குறித்து அமைச்சர் பன்னீர் செல்வம் அவமதிக்கும் வகையில் பேசியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. முருகன் இரண்டா அ‌ல்லது மூன்றா? ஆமாம் சாமி... இரண்டு திருமணம் தான். அந்த காலத்திலேயே ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர் தினை மாவு சாப்பிட்டார் " என்று கூறி விட்டு "ஏதோ சாதாரணமாக கிண்டலாக, ஜோவியலாக பேசுகிறேன்" எ‌ன்று‌ம் கூ‌றியு‌ள்ளா‌ர். 

கூறி விட்டு "ஏதோ சாதாரணமாக கிண்டலாக, ஜோவியலாக பேசுகிறேன்" எ‌ன்று‌ம் கூ‌றியு‌ள்ளா‌ர்.

உவமான, உவமேயங்களுக்கு ஆன்மீக எதிர்ப்பாளர்கள் ஏன் கடவுள்களை குறிப்பிட வேண்டும்? ஏன் க‌ட‌ந்த காலத்தை குறிப்பிட வேண்டும்? நிகழ் காலத்தில் இல்லாத சான்றுகளா? திராவிட மாடலில் இல்லாத ஒப்பீடுகளா?(2/3)

— Narayanan Thirupathy (@narayanantbjp)

உவமான, உவமேயங்களுக்கு  ஆன்மீக எதிர்ப்பாளர்கள் ஏன் கடவுள்களை குறிப்பிட வேண்டும்? ஏன் க‌ட‌ந்த காலத்தை குறிப்பிட வேண்டும்? நிகழ் காலத்தில் இல்லாத சான்றுகளா? திராவிட மாடலில் இல்லாத ஒப்பீடுகளா? சாதாரணமாக, கிண்டலாக, ஜோவியலாக உங்கள் தலைவர் கருணாநிதி அவர்களையே குறிப்பிட்டிருந்தால் அனைவருக்கும் எளிதாக புரிந்திருக்குமே? தினை மாவை எங்கே வாங்கினார் என்பதையும் சேர்த்து சொல்லுங்களேன்! என நாராயணன் திருப்பதி ஆவேசமாக கூறியுள்ளார்.

click me!