
'ஜனநாயகத்தின் சின்னமாகவே மாறிவிட்டார் தினகரன், அம்மாவிற்கு பிறகு ஒரு ஆளுமை உள்ள தலைவனை இப்போது அடையாளம் காட்டியிருக்கிறது என சசிகலாவின் சின்னம்மா பஜனை கோஷ்டியில் அங்கம் வகிக்கும் நாசா என்கிற நாஞ்சில் சம்பத் தனது முகநூல் பக்கத்தில் தினகரனே வெட்கப்படும் அளவிற்கு துதி பாடியுள்ளார்.
தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அவ்வப்போது தினகரனுக்கு பஜனைப்பாட்டு பாடும் நாஞ்சில் சம்பத் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
இந்திய அரசியல் வரலாற்றில் தேர்தல் ஆணையம் நேற்று இழைத்ததவறைப்போல் இதுவரை எந்நாளும் செய்ததில்லை. இது ஜனநாயகத்தின் மீது நடந்த பகிரங்கதாக்குதல்ஜனநாயகத்தின் மீது நடந்தஅத்துமீறல்ஜனநாயகத்தின் மீது நடந்தஆக்கிரமிப்பு
மக்களாட்சி தத்துவத்தின் மீது நடந்து இருக்கிற கொரில்லாத் தாக்குதல், இந்த பச்சைப் படுகொலைக்குப் பின்னால் யார்இருக்கிறார்கள் என்பது பச்சைக் குழந்தைக்கு கூட தெரியும்.
ஒரு துரோகி அதிர்ச்சி அடைந்தேன் என்கிறார்இன்னொரு துரோகி மகிழ்ச்சி அளிக்கிறது என்கிறார்,இன்னொரு துரோகி எங்கள் வெற்றிக்கு முதல்படி என்கிறார், துரோகத்துக்கு கிடைத்து இருக்கிற விளம்பரமும் வெளிச்சமும் இனி கிடைக்காது.
சரித்திரம் இவர்களை குப்பைத்தொட்டியில் தூக்கி வீசும் .இதை அநீதியாகப் பார்க்கவில்லை , இதை அனுபவமாக பார்க்கிறேன் என்று துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சொன்னதைக் கேட்டு சொர்க்கமே சொக்கிவிட்டது. அவருடைய நாகரீக அரசியலை நாளை இந்த நாடே முழுமையாக அங்கீகரிக்கும். துரோகத்தின் ஆரக்கால்கள் வெட்டி வீழ்த்தப்படும்.
ஜனநாயகத்தின் சின்னமாகவே டிடிவி தினகரன் அவர்கள் மாறிவிட்டார்கள் ஆகவே ஏற்பாடுபட்டாவது டிடிவி தினகரன் அவர்களை வெற்றி பெற வைப்போம், எல்லாத் திசைகளும் அவருடைய திருப்பெயரை திரும்பத்திரும்ப உச்சரிக்கும் நேரம் வந்து விட்டது.
தமிழகம் அம்மாவிற்கு பிறகு ஒரு ஆளுமை உள்ள தலைவனை இப்போது அடையாளம் காட்டியிருக்கிறது. அவர் பின்னால் அணிவகுப்போம்! பணி முடிப்போம்!