நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் இவர்தான் !! அதிரடி தகவல் !!

Published : Sep 21, 2019, 11:58 PM IST
நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் இவர்தான் !! அதிரடி தகவல் !!

சுருக்கம்

தமிழகத்தில் இடைத் தேர்தல் நடைபெறவுள்ள நாங்குனேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் குமரி அனந்தன் போட்டியிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.  

தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் அக்டோபர் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும். வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24-ஆம் தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா சனிக்கிழமை அறிவித்தார்.

இதையடுத்து விக்ரவாண்டியில் திமுக போட்டியிடும், நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இந்நிலையில், நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிகளில் போட்டியிட விருப்பமுள்ளவர்களிடம் இருந்து திங்கள்கிழமை விருப்பமனு பெறப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.

இதனிடையே நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவரும், ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் வருகை தந்தனர். 

அப்போது பெரும்பாலும் இதுபோன்ற நிகழ்வுகளின் போது பெரிதும் கலந்துகொள்ளாத குமரி அனந்தனும் உடனிருந்தது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

12,000 அடி உயரத்தில் பதுங்கு குழியில் ஜெய்ஷ் பயங்கரவாதிகள்..! உயிர் பிழைக்க பதுக்கிய அரசி- மேகி..!
ஆளுநரின் தேநீர் விருந்து.. ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கும் திமுக கூட்டணி கட்சிகள்!