காங்கிரஸ் கட்சிக்கு புதிய அலுவலகம் ! இந்திரா காந்தி பவன் ! திறந்து வைக்கிறார் சோனியா !!

Published : Sep 21, 2019, 11:33 PM IST
காங்கிரஸ் கட்சிக்கு புதிய அலுவலகம் ! இந்திரா காந்தி பவன் ! திறந்து வைக்கிறார் சோனியா !!

சுருக்கம்

தலைநகர் டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் புதிய அலுவலகமான இந்திராகாந்தி பவன் டிசம்பர் 28-ம் தேதி திறக்கப்படும் என அக்கட்சி இன்று அறிவித்துள்ளது.. காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி இந்த புதிய அலுவலகத்தை திறந்து வைக்கிறார்.  

காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் டெல்லியில் உள்ள அக்பர் சாலையில் நாற்பது ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. 

இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு புதிய அலுவலகம் கட்டப்பட உள்ளது, அதன் திறப்பு விழா டிசம்பர் 28-ம் தேதி நடைபெற உள்ளது என அக்கட்சி தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியினர் கூறுகையில், மத்திய டெல்லியில் அமைந்துள்ள கோட்லா சாலையில் எண் 4ல் காங்கிரஸ் கட்சிக்கு புது அலுவலகம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. 

காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்ட டிசம்பர் 28-ம் தேதி இது திறக்கப்பட உள்ளது. இந்த அலுவலகத்துக்கு இந்திராகாந்தி பவன் என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதா திமுக அரசு? விளாசும் இபிஎஸ்
100 பேர் கூட இல்லாத டாக்டர் ராமதாஸ் டெல்லி போராட்டம்..! ஒங்கும் அன்புமணி கை