மேலும் ஒரு அதிமுக எம்எல்ஏவுக்கு கொரோனா பாதிப்பு... மருத்துவமனையில் அனுமதி.. அதிர்ச்சியில் முதல்வர்..!

Published : Sep 23, 2020, 06:09 PM ISTUpdated : Sep 24, 2020, 01:21 PM IST
மேலும் ஒரு அதிமுக எம்எல்ஏவுக்கு கொரோனா பாதிப்பு... மருத்துவமனையில் அனுமதி.. அதிர்ச்சியில் முதல்வர்..!

சுருக்கம்

நாங்குநேரி தொகுதி அதிமுக எம்எல்ஏ நாராயணனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

நாங்குநேரி தொகுதி அதிமுக எம்எல்ஏ நாராயணனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

கொரோனா வைரஸ் இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை தாண்டியுள்ளது. உயிரிந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. பொதுமக்கள் மட்டுமின்றி கொரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், காவலர்கள், அரசியல் தலைவர்கள், எம்எல்ஏக்கள், எம்பி.க்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனாவால் தமிழகத்தில் ஒரு எம்எல்ஏ மற்றும் எம்.பி. உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில், நாங்குநேரி தொகுதி அதிமுக எம்எல்ஏ நாராயணன் அவர்களுக்கு கடந்த சில நாட்களாக சளி மற்றும் காய்ச்சல் தொந்தரவு இருந்துள்ளது. இதனையடுத்து, அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். பரிசோதனை செய்ததில் கொரோனா பாசிட்டிவ் என முடிவு வந்துள்ளது. இதனையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுவரை 40க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

இம்ரான் கான் ஒரு பைத்தியக்காரன்..! பாகிஸ்தான் ராணுவம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
விடாது கருப்பு..! துவண்டு கிடந்த ஓ.பி.எஸுக்கு துணிச்சல் கொடுத்த அமித் ஷா..! அதிமுவில் மீண்டும் அதிகார ஆடுபுலி ஆட்டம்..!