தமிழ் பிஞ்சுகளை முடக்க சதி...!! மதுரை விமான நிலையத்தில் பள்ளிக் கல்வித்துறையை பாய்ந்து அடித்த சீமான்...!!

By Ezhilarasan BabuFirst Published Jan 28, 2020, 5:17 PM IST
Highlights

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களிடையே மனச் சோர்வையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தும் எனவே  உடனடியாக அதை ரத்து செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களிடையே மனச் சோர்வையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தும் எனவே  உடனடியாக அதை ரத்து செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.  அவரின் பொதுக்கூட்ட மேடைகளில் இது குறித்து அவர் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில்  அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்வி கொள்கையை நடைமுறைபடுத்தும் வகையில்  ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்புக்கு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு  நடைபெறும் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது .  இதற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில்,   ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்பு  பொதுத் தேர்வு நடைபெற உள்ளது . அத்தேர்வுகளுக்கான தேதிகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.   ஐந்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 15 -4- 2020 தொடங்கி 20 -4- 2020  முடிவடைகிறது . 

எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு 30-3-2020-ல் தொடங்கி, 17-4-2020-ல் முடிவடைகிறது. அதாவது மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தவும் எதிர்வரும்  பொதுத்தேர்வுகளை  மாணவர்கள் எந்த அச்சமுமின்றி சந்திப்பதற்கு அவர்களை தயார்படுத்தும் நோக்கில்  அவர்களுக்கு இந்த தேர்வுமுறை நடத்தப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது . இந்நிலையில் ஐந்தாம் வகுப்பிற்கு தமிழ் ,  ஆங்கிலம் ,  கணக்கு  ஆகிய மூன்று பாடங்களுக்கும் .  எட்டாம் வகுப்பிற்கு தமிழ் , ஆங்கிலம் ,  கணக்கு ,  அறிவியல், சமூக அறிவியல் ஆகிய ஐந்து பாடங்களுக்கும் தேர்வு நடைபெறுகிறது .  பொதுத்தேர்வு நடத்தப்பட்டாலும் முதல் மூன்றாண்டுகளுக்கு மாணவர்களை தேர்வில் தோல்வியடையச் செய்ய மாட்டார்கள் என அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது ஆனாலும் பல்வேறு சமூக அமைப்புகள் கல்வியாளர்கள் ,  மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த பொதுத் தேர்வு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

இந்தநிலையில் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ,5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு என்பது தேவையில்லா ஒன்று. இதன் மூலம் மாணவர்களிடையே மனச்சிதைவு , மற்றும்  மன அழுத்தமும் ஏற்படும்,  மாணவர்கள் எதிர்காலம் பாதிக்கப்படும். அதற்கு பதிலாக ஒன்பதாம் வகுப்பில் மாதிரி தேர்வு என்ற நடைமுறையை அமல்படுத்தலாம். 5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வைக்கும் பொழுது சிறு வயதிலேயே மாணவர்களும் மாணவிகளும் மிகுந்த மனவேதனைக்கு உள்ளவர்கள் என்று கூறினார் . 
 

click me!