திமுக எம்.எல்.ஏ வுக்கு பகிரங்க கொலை மிரட்டல்..! ஆதரவாளர்கள் அதிர்ச்சி..!

Published : Jan 28, 2020, 04:50 PM IST
திமுக எம்.எல்.ஏ வுக்கு பகிரங்க கொலை மிரட்டல்..! ஆதரவாளர்கள் அதிர்ச்சி..!

சுருக்கம்

மணிகண்டன் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் காணொளி ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்கள் தனது வீட்டிற்கே வந்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறியிருக்கிறார்.  தனது குடும்பத்தினரையும் மிரட்டியதால் ஆத்திரத்தில் இருப்பதாகவும் அதன்காரணமாக அனிதா ராதாகிருஷ்னனின் அக்கிரமங்களை வெளியிட போவதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும் சினிமா பாணியில் சட்டமன்ற உறுப்பினருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் கடந்த 2001 ம் ஆண்டு முதல் உறுப்பினராக இருந்து வருபவர் அனிதா ராதாகிருஷ்ணன். 2001 முதல் நடந்த 4 பேரவை தேர்தல்களிலும் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளார். அதிமுகவில் அமைச்சராக இருந்த இவர், பின்பு திமுகவிற்கு மாறினார். தற்போது திமுகவின் தெற்கு மாவட்ட செயலாளராக பதவி வகித்து வருகிறார். 

இந்தநிலையில் திருச்செந்தூரைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மணிகண்டன் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் காணொளி ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்கள் தனது வீட்டிற்கே வந்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறியிருக்கிறார்.  தனது குடும்பத்தினரையும் மிரட்டியதால் ஆத்திரத்தில் இருப்பதாகவும் அதன்காரணமாக அனிதா ராதாகிருஷ்னனின் அக்கிரமங்களை வெளியிட போவதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும் சினிமா பாணியில் சட்டமன்ற உறுப்பினருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

தீபிகா மணிகண்டன் என்கிற தனது முகநூல் பக்கத்தில் காணொளியை அவர் பதிவேற்றிய நிலையில் அது வைரலாகி இருக்கிறது. வாட்ஸ் அப்பிலும் வீடியோ பரவி வருகிறது. இதனிடையே மணிகண்டன் தற்போது தலைமறைவாகி இருக்கிறார். அவரை காவல்துறையினர் தேடுவதோடு மட்டுமில்லாமல் அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்களும் தேடி வருகின்றனர்.

Also Read: 'கலெக்டர்ல இருந்த எல்லாரையும் அவங்க கவனிக்கிறாங்க.. விட்டுரு'..! மணல் கடத்தலுக்கு ஆதரவாக வி.ஏ.ஓ வை மிரட்டிய வருவாய் அதிகாரி..!

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!