பேறுகாலத்தில் தாய்மார்கள் இறப்பு அதிகரிப்பு ஏன்..!! அரசு மருத்துவமனைகள் குறித்து வெளியாகும் பகீர் தகவல்...??

By Ezhilarasan BabuFirst Published Jan 28, 2020, 4:34 PM IST
Highlights

 எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என்பதை  முடிவு செய்யும் உரிமையை, கர்ப்பிணிப் பெண்களிடமிருந்து  தமிழக அரசு பறிப்பது சரியல்ல.

தமிழக அரசின் தவறான நடைமுறைகளால், பேறுகாலத்தில் தாய்மார்கள் இறப்பு அதிகரிப்பு,  கொரோனா வைரஸ் நோய் தடுப்பில் போதிய நடைமுறைகள் பின்பற்றப் படவில்லை. நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதில் ,தமிழக அரசின் இரட்டை வேடம் போடுகிறது உள்ளிட்ட அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளது சமூக சமத்துவத்திற்காக மருத்துவர்கள் சங்கம் .  இது குறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் , இன்று சென்னை பத்திரிக்கையாளர்கள் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  பிரசவகால தாய்மார்களின் மரணவிகிதத்தை குறைப்பதற்காக தமிழக அரசு முயற்சி எடுத்துவருவது வரவேற்கத்தக்கது. ஆனால்,அதற்காக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளால் எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை. 

நமது தமிழகத்தில் பேறுகாலத் தாய்மார்கள் இறப்பு விகிதம் தலைநகர் சென்னையிலேயே மாநில சராசரியை விட அதிகமாக உள்ளது.பல அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் சென்னையில் இருக்கின்ற போதிலுர், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாத மருத்துவமனைகளில் ,
பிரசவம் பார்க்க கட்டாயப் படுத்துவதே இதற்கு முக்கியக் காரணம். பிரசவ கால மரணங்களை குறைக்க,அறுவை அரங்கம் இரத்தச் சேமிப்பு வசதியும்,மகப்பேறு மருத்துவர்கள்,குழந்தை மருத்துவர்கள் ,மயக்க மருத்துவர்கள் சேவைகளுடன், செவிலியர்கள், அறுவை அரங்க ஊழியர்கள் ,துப்புறவு பணியாளர்கள் அனைவரும்,அனைத்து கட்டமைப்புடன், 24 மணி நேரமும் பணியில் இருக்கும் இடத்தில் தான் திட்டமிட்ட. பிரசவம்  (Elective deliveries)  பார்க்கப் பட வேண்டும்.மக்கள் தொகைக்கு ஏற்ப ,மருத்துவத் துறை பணியாளர்கள் நியமிக்கப் பட்டிருக்க வேண்டும்.அவ்வாறு செய்யப்பட வில்லை.

அவரசமான நேரங்களில் அருகிலுள்ள பெரிய மருத்துனைக்கு செல்லக்கூட நேரமில்லா அவசர பிரசவங்கள் மட்டுமே ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடத்ததப் பட வேண்டும். கர்ப்பிணிப் பெண்களின் வசிப்பிடம் அருகிலேயே,மேம்பட்ட வசதிகளுடன் கூடிய அரசு மருத்துவமனைகள் இருந்த போதிலும் ,பிரசவத்திற்காக வரும் தாய்மார்கள், அங்கு அனுமதிக்கப் படுவதில்லை. அவர்கள்,
தொலைவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கட்டாயப்படுத்தி அனுப்பி வைக்கப் படுகின்றனர். போதிய வசதிகளும்,அறுவை அரங்கம் ,இரத்தச் சேமிப்பு வசதியும்,மகப்பேறு மருத்துவரும் , குழந்தை மருத்துவரும் ,மயக்க மருத்துவரும்  ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருப்பதில்லை. ஏனெனில் ,ஆரம்ப சுகாதார நிலையங்கள் நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கான நிறுவனங்களே தவிர, உயர் சிகிச்சை வழங்குவதற்கான மையங்கள் அல்ல. இந்நிலையில், பிரசவத்திற்காக அனுமதிக்கப்படும் கர்ப்பிணிப் பெண்களுக்கு, திடீர் சிக்கல்கள் ,பாதிப்புகள் ஏற்பட்டால், அவசர சிகிச்சைகள் வழங்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால், பிரசவத்தின் பொழுதோ,அதன் பிறகோ தாய்மார்கள் இறக்கும் அவல நிலை ஏற்படுகிறது. 

போதிய வசதிகளும்,இரத்தச் சேமிப்பு வசதியும் அங்கு இல்லை.மகப்பேறு மருத்துவர்கள்,அங்கு நியமிக்கப்படவில்லை. இந் நிலையில் ,ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்படும் கர்ப்பிணிப் பெண்களுக்கு, திடீர் சிக்கல்கள் ,பாதிப்புகள் ஏற்பட்டால், அவசர சிகிச்சைகள் வழங்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால், பிரசவத்தின் பொழுதோ,அதன் பிறகோ தாய்மார்கள் இறக்கும் அவல நிலை ஏற்படுகிறது. அதைப் போலவே, தமிழக அரசின் இதர அரசு மருத்துமனைகளிலும் , மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவப் பிரிவுகளில் கடும் மருத்துவர்கள்,மருத்துவ ஊழியர்கள் தட்டுப்பாடு உள்ளது.மகப்பேறு மருத்துவர்கள் 24 மணி முதல் 48 மணி நேரம் வரை பணி செய்ய நிர்பந்திக்கப் படுகின்றனர். இந்த கடும் பணிச் சுமை ,சேவைத் தரத்தை பாதிக்கிறது.பேறுகால சிகிச்சை முறைகள் குறித்த வழிகாட்டும் நெறிமுறைகள்
 ( Protocols)  அரசால் உருவாக்கப்படவில்லை.

மருத்துவக் கட்டமைப்புக் குறைபாடுகளும் உள்ளன.இவையும் பல மரணங்களுக்குக் காரணமாகின்றன.இதற்கு தமிழக அரசின் அலட்சியப் போக்கும், தவறான கொள்கையும், வழிகாட்டுதலுமே காரணம். எனவே, இத்தகைய மரணங்களுக்கு தமிழக அரசே, பொறுப்பேற்க வேண்டும்.தன் மீது உள்ள தவறை மறைப்பதற்காக , தமிழக அரசு,மகப்பேறு மருத்துவர்களையும்,இதர மருத்துவர்களையும், செவிலியர்களையும் பழிவாங்கி வருகிறது.முறையான துறைவாரியான விசாரணை கூட நடத்தாமல்,வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமே, 17b பிரிவின் மூலம் நடவடிக்கை எடுப்பது போன்ற ஜனநாயக விரோத ,சர்வாதிகாரப்   போக்குகள் நடைபெறுகின்றன.மருத்துவர்களை அவமானப்படுத்தும்  வகையில், கேவளமான முறையில் தமிழக அரசின் உயர் அதிகாரிகள் சிலர் செயல்படுகின்றனர். மருத்துவர்களின் தன்மானத்தை பாதிக்கும் வகையில் ,தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை உயர் மட்ட அதிகாரிகள் செயல் படுவது கடும் கண்டனத்திற்குரியது.

மக்கள் நல்வாழ்வுத் துறை உயர் மட்ட அதிகாரிகளின் ,மருத்துவர்கள் விரோத , நீண்ட காலத் தொடர்  செயல்பாடுகள், மருத்துவர்களை உள ரீதியாக பாதிப்படையச் செய்துள்ளது.மக்கள் நல்வாழ்வுத் துறை உயரதிகாரிகளின் ,இத்தகைய அணுகுமுறை ,அரசு மருத்துவர்களின் செயல்பாட்டையும்,மன உறுதியையும், மருத்துவமனைகளின் செயல்பாட்டையும் பாதித்து வருகிறது. இத்தகையப் போக்கு,மிக மோசமான நிலையில் ,உயிருக்குப் போராடும் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதில் தயக்கம் ஏற்படும்.தமிழக அரசின் ,மக்கள் நல்வாழ்வுத் துறை உயர் அதிகாரிகளின், மருத்துவர்கள் விரோத,பேறுகாலத் தாய்மார்களுக்கு விரோத  நடவடிக்கைகள் கடும் கண்டனத்திற்குரியது. எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என்பதை  முடிவு செய்யும் உரிமையை, கர்ப்பிணிப் பெண்களிடமிருந்து  தமிழக அரசு பறிப்பது சரியல்ல.

மேம்பட்ட வசதிகள் உள்ள மருத்துவமனை அருகில் இருக்கும் பொழுது, பிரசவத்திற்கு அதில் சேர அனுமதிக்காமல் ,தொலை தூரத்தில் உள்ள வசதிகளற்ற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு  நிறைமாதக் கர்ப்பிணிப் பெண்களை கட்டாயப் படுத்தி அனுப்பும் போக்கை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும். சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. வேறு சில நாடுகளிலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், மத்திய அரசும் ,தமிழக அரசும் கொரோனா வைரஸ் தொற்றுத் தடுப்பில் போதிய கவனம் செலுத்தவில்லை. கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதற்கான கட்டமைப்பு வசதிகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை. இத்தகையத் தொற்று ஏற்பட்டவர்களை, இதர நோயாளிகள் சிகிச்சை பெறும் மருத்துவமனைகளில் அனுமதிக்கும் வகையில் திட்ட மிடுவது சரியல்ல. பிற நோயாளிகளுக்கு, வைரஸ் தொற்று ஏற்பட இது வழி வகுக்கும். 

நீட் தேர்வை சட்ட ரீதியாக மாற்றிட மத்திய அரசுக்கு உடந்தையாக இருந்து விட்டு , நீட்டிலிருந்து விலக்கு பெற உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது ,ஒரு கண் துடைப்பு நாடகமாகும். நீட்டிலிருந்து விலக்கு பெற,தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும் என,மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். இன்றைய பத்திரிக்கையாளர் சந்திப்பில் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் டாக்டர் ஏ.ஆர்.சாந்தி,பொருளாளர் டாக்டர் ஜி.ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

click me!