கலைஞருக்கும் பிடிக்கக் கூடிய திட்டம்.. என்னுடைய கனவு திட்டம்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

By Raghupati R  |  First Published Aug 7, 2023, 7:09 PM IST

கலைஞருக்கும் பிடிக்கக் கூடிய திட்டம் நான் முதல்வன் திட்டம். நான் முதல்வன் திட்டம் என்னுடைய கனவு திட்டம் மாணவர்கள், இளைஞர்கள் இடையே பெரிய மாற்றத்தை ஏற்படுத்த நான் முதல்வன் திட்டம் காரணமாக அமைந்துள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நான் முதல்வன் திட்ட ஓராண்டு வெற்றி விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பொன்முடி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பலர் பங்கேற்றுள்ளனர். 

இந்த விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின், “நான் முதல்வன் திட்டத்தின்கீழ் இதுவரை 1.5 லட்சம் மாணவர்கள் வேலைவாய்ப்புகள் பெற்றுள்ளனர். கலைஞருக்கும் பிடிக்கக் கூடிய திட்டம் நான் முதல்வன் திட்டம். நான் முதல்வன் திட்டம் என்னுடைய கனவு திட்டம் மாணவர்கள், இளைஞர்கள் இடையே பெரிய மாற்றத்தை ஏற்படுத்த நான் முதல்வன் திட்டம் காரணமாக அமைந்துள்ளது. 

Tap to resize

Latest Videos

நான் முதல்வன் திட்டத்தின்கீழ் இதுவரை 13 லட்சம் மாணவர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. கல்வி, அறிவாற்றலில் தமிழ்நாடு மாணவர்கள், இளைஞர்கள் முன்னேறக் கூடிய வகையில் நான் முதல்வன் திட்டம் கொண்டுவரப்பட்டது. நான் முதல்வன் போன்ற திட்டங்கள்தான் தலைமுறை தலைமுறையாக பயன்படக்கூடியது. தமிழ்நாட்டின் இளைஞர்களை உலகின் தலைசிறந்தவர்களாக ஆக்குவதே எனது நோக்கம். 

விளையாட்டுத்துறையில் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவது போல நான் முதல்வன் திட்டத்தையும் உதயநிதி ஸ்டாலின் சிறப்பாக செயல்படுத்திவருகிறார்.எந்த பன்னாட்டு நிறுவனமும் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கான மனித வளத்தை நான் முதல்வன் திட்டம் உறுதி செய்துள்ளது. 

அறிவுப் புரட்சியை ஏற்படுத்திவரும் திட்டம்தான் நான் முதல்வன் திட்டம். படிப்பு என்பது பட்டம் சார்ந்தது மட்டுமின்றி திறமை சார்ந்ததாக மாற வேண்டும். யுபிஎஸ்சி தேர்வுகளில் தமிழ்நாடு மாணவர்களின் தேர்ச்சி நாளுக்குநாள் குறைந்து வருவது வருத்தம் அளிக்கிறது” என்று கூறியுள்ளார்.

500 ரூபாய் நோட்டு வைத்திருப்போர் எச்சரிக்கை.. ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு - முழு விபரம் இதோ !!

click me!