
தேர்தல் நேரத்தில் சின்னத்தை மையமாக வைத்து பேசப்படும் விஷயங்கள் சில நேரங்களில் சிரிக்க வைக்கும், சிந்திக்கவும் வைக்கும்.
அந்த வகையில், "இரட்டை இலை" சின்னம் இல்லை என்று ஆன பிறகு, தினகரனுக்கு தொப்பியும், மதுசூதனனுக்கு இரட்டை விளக்கு மின் கம்பமும் சின்னமாக வழங்கப்பட்டுள்ளது.
தொப்பி என்பது மழையிலும், வெயிலிலும் மனிதனை காக்கும் என்று தினகரன் தரப்பு சொல்ல, தொப்பி ஒரு மனிதனுக்குதான் பயன் அளிக்கும், ஆனால் மின் கம்பமோ தெருவுக்கே வெளிச்சம் தரும் என்றது எதிர் தரப்பு.
யானையோடு யானை மோதுவது போல தினகரன் தரப்பும், பன்னீர் தரப்பும் ஒருபக்கம் சின்னத்தை மையமாக வைத்து சிரிப்பு மூட்ட, எறும்பு போல அருகில் இருந்து சீமான் தரப்பும் கலாய்த்துக் கொண்டிருக்கிறது.
சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு "இரட்டை மெழுகுவர்த்தி" சின்னத்தில், தமிழன் டி.வி கலைக்கோட்டுதயம் போட்டியிடுகிறார். அதற்காக அவர்கள் அடிக்கும் கிண்டலோ வேறு மாதிரி இருக்கிறது.
தினகரன், பன்னீர், திமுக என மூவரின் சின்னங்களையும் சகட்டுமேனிக்கு கேலிசெய்து அவர்கள் வெளியிட்டுள்ள வாசகங்கள் இதோ...
தொப்பி - கொள்ளையர்கள் ஜாக்கிரதை !
மின்கம்பங்கள் - இரவில் செயலிழக்கலாம் !
சூரியன் இருக்காது ! அவசர உதவிக்கு #மெழுகுவர்த்திகள்!
இவை அனைத்தும் சிரிப்பதற்கு மட்டுமே, சிந்திப்பதற்கு அல்ல.