வீட்டில் பெட்டி பெட்டியாக குவார்ட்டர் வாங்கி வைத்திருக்கிறேன்.. சீமான் சொன்ன புது மேட்டர்..

By Raghupati R  |  First Published Oct 1, 2023, 9:29 PM IST

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.


கடலூர் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் வரப்போகின்ற பாராளுமன்றத்தேர்தல் குறித்தான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார்.

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “பாராளுமன்ற மன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. இதில் புதிய யுக்தியாக மற்ற கட்சிகள் 5 ஆயிரம் கொடுத்தால் நான் 50 ஆயிரம் தருவேன். கர்நாடகா பக்கத்து மாநிலமா? அல்லது பகை நாடா?. நீர்வளம் அவர்களுக்கு முக்கியம் என்றால், என் நில வளம் எங்களுக்கு முக்கியம் என்ற முடிவுக்கு வருவோம்.

Tap to resize

Latest Videos

கருணாநிதிக்கும் திமுக அரசின் உரிமைத்தொகைக்கும் என்ன சம்மந்தம் உள்ளது? தவறான நிர்வாகம் நடக்க அதனை தேர்வு செய்த மக்களும் தான் காரணம். அன்று இந்தி தெரியாது போடா என்றவர்கள்,இன்று இந்தி தெரியுமா வேலை வாருங்கள் என அழைக்கின்றனர். 

காவிரி நதிநீர் பிரச்சினையில் எதிர்கட்சியாக இருந்தபோது திமுக ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது. என் காசை எடுத்து எனக்கு கொடுப்பதற்கு கருணாநிதி உரிமைத்தொகை என பெயர் வைக்கின்றனர். அவருக்கும் உரிமை தொகைக்கு என்ன சம்பந்தம். ஒரு நாளைக்கு 30 ரூபாய் சம்பாதிக்க முடியாத அளவு என் மக்களை பிச்சைக்காரியாக ஆக்கி வைத்துள்ளார்கள். 

என் வீட்டில் களை எடுக்கும், காய்கறி பறிக்கும் பெண்களுக்கு ஒரு நாளைக்கு 500 ரூபாய் அதுபோக ஆண்களாக இருந்தால் குவாட்டரும் சேர்த்துக் கொடுக்கிறேன். குவாட்டர் கொடுத்தால் தான் வேலைக்கு வருகின்றனர். இதற்காக பெட்டி பெட்டியாக குவாட்டர் வாங்கி வைக்கிறேன்” என்று கூறினார்.

ரயில் டிக்கெட் வாங்கினாலும் அபராதம் உண்டு.. இந்திய ரயில்வேயின் இந்த விதி தெரியுமா.? உஷார் மக்களே

click me!