அரசியல் மூலமாக ஆதாயங்களை தேடி தான் ஒரு பவர்ஃபுல் மனிதர் என்பதை காட்டுவதற்காக வருகிறார்கள் சிலர் தவறாக மனிதர்களாக இருந்தாலும் தன்னை திருத்திக் கொள்ள ஒரு வாய்ப்பாக இதனை பார்க்கிறார்கள்.
பாஜக கட்சியின் அடையாளத்தை வைத்துக்கொண்டு யாரேனும் தவறு செய்தால் நான் சும்மா விட மாட்டேன் என அண்ணாமலை கூறியுள்ளார்.
நெடுங்குன்றம் சூர்யா பாஜகவில் இணைந்தது குறித்தான கேள்விக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலளிக்கையில்;- நெடுங்குன்றம் சூர்யா கட்சியில் இணைந்தது எனக்கு தெரியாது. நான் பாதையாத்திரை சென்று கொண்டிருக்கிறேன். கட்சியில் இணைவது பற்றி கூறினால் நான் யாரையும் இணைக்க வேண்டும் என கூறுவதில்லை. அரசியலுக்கு வந்த புதிதில் நான் வெள்ளை கருப்பாக சமுதாயத்தை பார்த்தேன். இந்த மூன்று ஆண்டுகளாக பார்க்கும் பொழுது இதனை ஒரு பவர் கேமாக அரசியலை பார்க்கிறார்கள். அரசியல் மூலமாக ஆதாயங்களை தேடி தான் ஒரு பவர்ஃபுல் மனிதர் என்பதை காட்டுவதற்காக வருகிறார்கள் சிலர் தவறாக மனிதர்களாக இருந்தாலும் தன்னை திருத்திக் கொள்ள ஒரு வாய்ப்பாக இதனை பார்க்கிறார்கள்.
தற்பொழுது கட்சியில் இணைந்து உள்ளவர்கள் அவர்களுக்குள்ளேயே ஒரு கட்டுப்பாட்டை விதித்து வந்துள்ளார்கள். இத்தனை ஆண்டுகளாக என்னுடைய எனர்ஜி நெகட்டிவ் எனர்ஜியாக போய்விட்டது. நான் பாசிட்டிவாக மாற்ற வேண்டும் என எண்ணுவது பாரதிய ஜனதா கட்சி ஒரு வாய்ப்பளித்துள்ளது என்பதாகத்தான் நான் பார்க்கிறேன். முடிந்தவரை இந்த கட்சியை டீசன்டாக நாங்கள் நடத்த பார்க்கிறோம். கட்சியில் ஒருவர் சேரும் பொழுது அவர்களுடைய கேசை பாருங்கள், அனைவரையும் நல்லவர்கள் என நான் கூற வரவில்லை. நல்லவர்கள் என கூறி கட்சியில் சேருபவர்கள் தொடர்ந்து நல்லவர்களாக இருக்கப் போவதும் கிடையாது.
ஒரு மாத காலம் இரண்டு மாத காலம் அவர்களை ட்ரெயல் பாருங்கள். நீங்கள் சொல்லுகின்ற நபருக்கும் கூட அந்த அணியின் தலைவர் ஏதேனும் ஒரு கட்டுப்பாட்டை விதித்திருப்பார் என நம்புகின்றேன். நான் இங்கிருந்து அதனை கண்காணித்து வருகிறேன். பாஜக கட்சியின் அடையாளத்தை வைத்துக்கொண்டு யாரேனும் தவறு செய்தால் நான் அதனை விட மாட்டேன். அவர் மாறுகின்றேன் என்று கூறியுள்ளதால் நான் அவருக்கு தடைக்கல்லாக இருக்க விரும்பவில்லை வழிக்கல்லாக இருக்க விரும்புகிறேன்.
பாஜகவில் அவர் இணையட்டும் நெகட்டிவ் எனர்ஜியை பாசிட்டிவ் எனர்ஜியாக மாற்றட்டும் இதன் மூலமாக அவருக்கு அமைதி கிடைக்கட்டும் நல்ல ஒரு பாரதத்தை படைப்பதற்கு பாஜக வை பயன்படுத்தி கொள்ளட்டும் அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். தவறாக இந்த கட்சியின் ஐடென்டிட்டியை பயன்படுத்த மாட்டார் என நான் நம்புகிறேன் என அண்ணாமலை தெரிவித்தார்.