ஜெயக்குமார் மீது பாயும் மைத்ரேயன் - ஜோக்கர் அமைச்சர் என கிண்டல்....

 
Published : Jul 07, 2017, 12:59 PM ISTUpdated : Sep 19, 2018, 12:51 AM IST
ஜெயக்குமார்  மீது பாயும் மைத்ரேயன் - ஜோக்கர் அமைச்சர் என கிண்டல்....

சுருக்கம்

mythreyan criticizing minister jayakumar

அமைச்சர் ஜெயக்குமார்  அதிமுகவின் இரண்டு அணிகளும் இணையும் என பேசி வருகிறார். இது இணைப்புக்கு எதிராக பேசி வரும் மைத்ரேயன் , கே.பி.முனுசாமி போன்றோருக்கு கடுப்பை வரவழைத்துள்ளது. ஜெயகுமார் ஒரு ஜோக்கர் என எச்சரித்துள்ளனர்.

அதிமுக இரு அணிகளாக பிரிந்துள்ள நிலையில் அதன் இணைப்பு பற்றி இரு அணிகளும் பேசி வந்தனர். சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைத்துவிட்டோம், இரு அணிகளும் இணைகிறது என்றெல்லாம் பேட்டி அளித்து பரபரப்பை ஏற்படுத்தினர்.

இதற்காக இரு அணிகளும் குழு அமைத்தன. பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வசதியாக சசிகலா பேனர்கள் அகற்றப்பட்டது, ஆனாலும் இரு அணிகளும் பேச்சு வார்த்தை நடத்தாமல் கபடி விளையாடிக்கொண்டிருந்தன. ஒரு கட்டத்தில் இணைப்பு விவகாரத்தில் மும்மூரமாக இருந்த மாஃபா பேச்சைக்கேட்டு ஓபிஎஸ் தலையாட்டும் நிலை வந்தது.

ஆனால் ஓபிஎஸ் தான் பொதுச்செயலாளர், முதல்வரும் அவரே கட்சி அணிகள் எங்களிடம் உள்ளதால் யாரையும் நாங்கள் கெஞ்ச வேண்டியதில்லை என்கிற ரீதியில் கே.பி.முனுசாமி வகையறாக்கள் பேட்டி அளிக்க பேச்சு வார்த்தை அடுத்த கட்டத்திற்கு நகராமல் முடங்கியது.

இதற்கிடையே மாறுபட்ட கருத்தை இரண்டு தரப்பும் தெரிவிக்க திடீரென பேச்சு வார்த்தை குழுவை ஓபிஎஸ் கலைத்தார். ஆனாலும் மாஃபா பாண்டியராஜன் போன்றோர்  பேச்சு வார்த்தை நடத்தி வரும் சூழ்நிலையில் மாஃபாவுக்கு எதிர் கோஷ்டியான மைத்ரேயன் இணைப்பு பற்றி கடுமையாக எதிர்த்து வருகிறார். 

அவரைப்போலவே கே.பி.முனுசாமியும் எதிர்த்து வருகிறார். கடந்த வாரம் இரு அணிகளும் இணையும் என்று தெரிவித்த ஜெயகுமாருக்கு கே.பி.முனுசாமி கடுமையாக எச்சரிக்கை விடுத்தார் . இந்நிலையில் இன்று காஞ்சிபுரத்தில் ஒரு விழாவில் கலந்துக்கொள்ள வந்த மைத்ரேயனிடம் ஜெயகுமார் கட்சி அணிகள் இணைப்பு பற்றி தொடர்ந்து பேசிவருகிறாரே என்று கேட்டதற்கு அவர் ஒரு ஜோக்கர் அமைச்சர் என்று காட்டமாக கூறினார்.

PREV
click me!

Recommended Stories

ஓநாய்களிடம் சிறுபான்மையினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..! கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன இபிஎஸ்..!
125 நாள் வேலையை வரவேற்கிறோம்..! ஆனால்..? பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!