ஓபிஎஸ் அணி தொடர்ந்த வழக்கு - சட்ட ஆலோசனை வழங்க அட்டர்னி ஜெனரல் மறுப்பு!

 
Published : Jul 07, 2017, 11:24 AM ISTUpdated : Sep 19, 2018, 12:51 AM IST
ஓபிஎஸ் அணி தொடர்ந்த வழக்கு  - சட்ட ஆலோசனை வழங்க அட்டர்னி ஜெனரல் மறுப்பு!

சுருக்கம்

chief advocate left from mafoi case

எடப்பாடி அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்த்து ஓபிஎஸ் அணி தொடர்ந்த வழக்கில் சட்ட ஆலோசனை கொடுக்க அரசு வழக்கறிஞர் மறுத்து விட்டார்.

கூவத்தூர் விவகாரத்துக்கு பிறகு நடந்த வாக்கெடுப்பில் எடப்பாடி அரசு வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க கோரி ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் சட்ட ஆலோசனை வழங்க அரசு வழக்கறிஞர் மறுத்துவிட்டார்.

ஜெயலலிதா மறைந்த பிறகு ஓபிஎஸ் அணி எடப்பாடி அணி  என இரண்டாக பிரிந்தது. யார் ஆட்சி அமைப்பது என்பதில் பிரச்சனை ஏற்பட்டு கூவத்தூரில் எம்.எல்.ஏக்கள் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் எடப்பாடியை நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்ள  கவர்னர் அழைத்தார். 

பிப்.,18 அன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் , ரகசிய ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால், குரல் ஓட்டெடுப்பில், பழனிசாமி அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து, பன்னீர்செல்வம் அணி சார்பில், முன்னாள் அமைச்சர்  மாஃபா.பாண்டியராஜன், உச்சநீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்தார்.

 இந்த மனு, நீதிபதிகள், தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கன்வில்கர் அமர்வு முன், இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்றம் , நம்பிக்கை ஓட்டெடுப்பு தொடர்பான வழக்கில் சட்ட உதவி வழங்க இயலாது என அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் அறிவித்துள்ளார். வழக்கில் ஆஜராகி விளக்கமளிக்க விரும்பவில்லை எனக்கூறியுள்ளார். ஓபிஎஸ் அணிக்கு சட்ட ஆலோசனை வழங்குவதால் இவ்வழக்கில் தன்னால் உதவ முடியாது எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

: முதல்வர் பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பு விவகாரத்தில் சட்ட உதவி வழங்க இயலாது என அட்டர்னி ஜெனரல் கேகே வேணுகோபால் அறிவித்துள்ளார். ஒத்திவைப்பு: பிப்.,18ல், முதல்வர் பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தபோது, ரகசிய ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என, பன்னீர்செல்வம் தரப்பினரும், எதிர்க்கட்சியான, தி.மு.க.,வும் வலியுறுத்தின. ஆனால், குரல் ஓட்டெடுப்பில், பழனிசாமி அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதை எதிர்த்து, பன்னீர்செல்வம் அணி சார்பில், முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனு, நீதிபதிகள், தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கன்வில்கர் அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம் ரகசிய வாக்கெடுப்பு நடத்துவது வழக்கமா என  மத்திய அரசின் சார்பில் ஆஜரான, அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணு கோபாலின்  உதவியை கோரியது.

ஆனால் ஓபிஎஸ் அணிக்கு தான் இந்த வழக்குக்கு ஆலோசனை வழங்கியதாகவும் மனசட்சிப்படி ஆலோசனை வழங்கி தாமே எதிராக சட்ட ஆலோசனை கொடுக்க விரும்பவில்லை என அட்டர்னி ஜெனரல் கே.கே,.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ் அணியில் இருக்கும் கே.கே வேணுகோபால் வழக்குக்கு சட்ட உதவிகளை செய்து வந்தார் இந்நிலையில் சமீபத்தில் அவர் அட்டர்னி ஜெனரலாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த  வழக்கின் விசாரணை, வரும், 11க்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. 

PREV
click me!

Recommended Stories

பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள் தானா? நிபந்தனையோடு இபிஎஸிடம் இறங்கி வந்த அமித் ஷா..!
பாஜகவை வைத்து தவெகவுக்கு ஸ்கெட்ச் போட்ட ஸ்டாலின்..! திமுகவை பேயடி அடித்த விஜய்..! சீக்ரெட் பின்னணி..!