என் தம்பி மகளுக்கே சீட் தர மாட்டேன்னு சொல்லிட்டாங்க.. அதே பள்ளிக் கூடத்திற்கே போய் அதிரவிட்ட ஸ்டாலின்.

By Ezhilarasan BabuFirst Published May 27, 2022, 1:39 PM IST
Highlights

திமுக ஆட்சியில் இருந்தபோது எனது தம்பி மகளுக்கு டிஏவி பள்ளியில் சீட்டு தர மறுத்துவிட்டார்கள், அப்போது திமுக ஆட்சியில் இருந்தும் அவர்கள் தர மறுத்தார்கள் என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அப்பள்ளியின் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார்.

திமுக ஆட்சியில் இருந்தபோது எனது தம்பி மகளுக்கு டிஏவி பள்ளியில் சீட்டு தர மறுத்துவிட்டார்கள், அப்போது திமுக ஆட்சியில் இருந்தும் அவர்கள் தர மறுத்தார்கள் என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அப்பள்ளியின் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். சென்னையில் டிஏவி கல்வி குழுமம் புகழ்பெற்ற கல்வி குழும இருந்து வருகிறது. இந்நிலையில் சென்னை பள்ளிக்கரணையில் டிஏவி குழுமத்தின் சார்பில் புதிய பள்ளிக்கூடம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. அதில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்துவைத்தார். ஆரிய சமாஜம் கல்வி சங்கம் மூலம் நிர்வகிக்கப்படும் இந்த பள்ளி 3 ஏக்கர் பரப்பளவில் சுமார் 5 ஆயிரம் மாணவர்கள் பயிலும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது விழா மேடையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், சென்னையில் அரை நூற்றாண்டு காலமாக டிஏவி பள்ளி சிறந்த கல்வி சேவையாற்றி வருகிறது. முதலமைச்சராகப் பொறுப்பேற்ற கடந்த சில நாட்களாக பள்ளி மற்றும் கல்லூரி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்று புத்துணர்ச்சி அடைந்து இருக்கிறேன். நான் பிறந்து வளர்ந்த கோபாலபுரத்தில் முதல் முதலாக டிஏவி பள்ளி தொடங்கப்பட்டது. இப்பள்ளியில் மூன்றாவது பள்ளியை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள் திறந்து வைத்தார். இந்த பள்ளியில் சீட் வாங்குவது என்பது மிகவும் சிரமம், அப்படி ஒரு அனுபவம் எனக்கு இருக்கிறது. என் மகள் செந்தாமரை கோபாலபுரம் டிஏவி பள்ளியில் தான் படித்தார்.

அதே என் தம்பி மகள் பூங்குழலிக்கு இந்த பள்ளியில் படிக்க சீட் கேட்டோம் ஆனால்  அவர்கள் கொடுக்க மறுத்துவிட்டார்கள், இத்தனைக்கும் அப்போது திமுக ஆட்சியில் இருந்தது. அப்படி இருந்தும் தரவில்லை, அந்த அளவிற்கு கட்டுப்பாடான பள்ளி. பின்னர் எப்படியோ சிரமப்பட்டு வாங்கினோம். கல்விதான் யாராலும் அழிக்க முடியாத சொத்து அனைத்து கல்விச் சாலைகளும் கல்வி கண் திறக்கும் சாலைகளாக உள்ளன. மாணவர்கள் என்றும் உண்மையை நேர்மையை கடைபிடிப்பவர்கள் ஆக இருக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள  இரண்டு அரசு பள்ளிகளுக்கு இந்தக் குழுமம் உதவி வருகிறது. போட்டி நிறைந்த உலகில் மாணவர்கள் நேர்மை உண்மை அறிவாற்றல் போன்றவற்றை பின்பற்றி தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளிகளின் அழகான தமிழ் பெயர்களை சூட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

click me!