முத்தலாக் தடைச் சட்டத்துக்கு எதிராக கொந்தளித்த நவநீதகிருஷ்ணன் ! கோபத்தின் உச்சிக்கே சென்ற பாஜக… மிரட்டி பணிய வைத்த அமித்ஷா !!

By Selvanayagam PFirst Published Jul 30, 2019, 9:13 PM IST
Highlights

முத்தலாக் தடைச் சட்டத்துக்கு எதிராக மாநிலங்களவையில் அதிமுக எம்.பி நவநீதி கிருஷ்ணன் பேசியதால் அதிர்ந்து போன அமித்ஷா, உடனடியாக எடப்பாடி பழனிசாமியைத் தொடர்பு கொண்டு மிரட்டியதையடுத்து வாக்கொடுப்பில் அதிமுக கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
 

முத்தலாக் மசோதாவை மக்களவையில் அதிமுக உறுப்பினரும், துணை முதலமைச்சர் ஓபிஎஸ்ன் மகனுமான  ரவீந்திரநாத்குமார் ஆதரித்துப் பேசினார்.
  
ஆனால் மாநிலங்களவையில் பேசிய அதிமுகவின் தலைவர் நவநீதகிருஷ்ணன், முத்தலாக் மசோதாவை நாடாளுமன்ற ஆய்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும். 
தவறான விளைவுகளை முத்தலாக் மசோதா ஏற்படுத்திவிடக்கூடாது என்று பேசினார். முத்தலாக் தடைச்சட்டத்துக்கு எதிராக நவநீதிகிருஷ்ணன் பேசியதால் பாஜக தலைமை கொந்திளத்துப் போனது.

இதையடுத்து அவையில் இருந்த அமித்ஷா, உடனடியாக எடப்பாடி பழனிசாமியை தொடர்புகொண்டு, ஓ.பன்னீர்செல்வம் மகன் முத்தலாக் மசோதாவை ஆதரித்து பேசினார். இப்பொழுது நீங்கள் அதனை எதிர்க்கிறீர்கள். விவாதத்திற்கு பிறகு மசோதா ஓட்டெடுப்புக்கு விடப்படும். ஆகவே நீங்கள் அந்த ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளக்கூடாது என எச்சரித்தார். 

அமித்ஷாவின் எச்சரிக்கை டெல்லியில் இருந்த அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பாஜகவின் உத்தரவுப்படி முததலாக் தடைச் சட்டம் தொடர்பாக வாக்கெடுப்பில் அதிமுக புறக்கணித்தது.

அதே நேரத்தில்  திமுகவும், காங்கிரஸ் கட்சியும் முத்தலாக் மசோதாவை எதிர்த்து வாக்களித்தன. ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள், தேசியவாத காங்கிரஸ் போன்ற கட்சி உறுப்பினர்கள் அவைக்கே வரவில்லை

click me!