முஸ்லிம்கள் லட்சுமியை வணங்குவது இல்லை அதற்காக அவர்கள் பணக்காரர்கள் ஆகிறது இல்லையா? அவர்கள் சரஸ்வதியை வழிபடுவதே இல்லை ஆனாலும் அவர்கள் அறிவாளிகளாக இல்லையா? என பாஜக எம்எல்ஏ பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முஸ்லிம்கள் லட்சுமியை வணங்குவது இல்லை அதற்காக அவர்கள் பணக்காரர்கள் ஆகிறது இல்லையா? அவர்கள் சரஸ்வதியை வழிபடுவதே இல்லை ஆனாலும் அவர்கள் அறிவாளிகளாக இல்லையா? என பாஜக எம்எல்ஏ பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அவரின் இந்த பேச்சால் கொந்தளிப்பால் அந்த மக்கள் அவரது உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சமீபகாலமாக சாதி மத வெறுப்புப் பிரச்சாரங்கள் சமூகத்தில் அதிகரித்துள்ளது. குறிப்பாக இஸ்லாமியருக்கு எதிரான பிரச்சாரங்கள் மற்றும் அவர்கள் மீதான தாக்குதல்கள் அடிக்கடி அரங்கேறி வருகிறது. இது ஒருபுறம் உள்ள நிலையில் பாஜகவை சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் இந்து கடவுள்கள் குறித்து அவ நம்பிக்கையாக பேசியுள்ள சம்பவம் மறுபுறம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படியுங்கள்: மூன்று இடத்தில் பாம் வெடிக்கும்... காவல்துறைக்கு வந்த போன் கால்... உச்சக்கட்ட பதற்றத்தில் மும்பை!!
பீகார் மாநிலம் பாட்னாவில் சேர்ந்த பாஜக எம்எல்ஏ லலன் பஸ்வான். இவர் தற்போது இந்து தெய்வ வழிபாடு குறித்து பேசி இருப்பது இந்து சமூக மக்களிடம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தீபாவளி அன்று நடைபெறும் லட்சுமி பூஜையை குறித்து அவர் பேசியுள்ள கருத்து இந்து மக்களை கொந்தளிக்க வைத்துள்ளது. லட்சுமியை வழிபட்டால் செல்வம் வந்து சேரும் என்று நாம் சொல்கிறோம், ஏன் முஸ்லிம்களில் பணக்காரர்களாகவில்லையா? அவர்கள் லட்சுமியை வழிபடுவதில்லை ஆனாலும் அவர்களும் பணக்காரர்களாகதான் இருக்கிறார்கள்.
இதையும் படியுங்கள்: ராஜ்கோட்டில் பிரதமர் மோடி ஊர்வலம்... இஸ்லாமிய சமூகத்தினர் உட்பட பொதுமக்கள் பலர் மலர் தூவி உற்சாக வரவேற்பு!!
ஏன் அவர்கள் சரஸ்வதியை கூடத்தான் வழிபடுவது இல்லை, ஆனால் இஸ்லாமியர்களிலும் நன்கு படித்தவர்கள் இருக்கிறார்கள். அவர்களும்தான் ஐஏஎஸ் ஐபிஎஸ் ஆகிறார்கள் என லக்ஷ்மி வழிபாட்டிற்கு நேர்மறையான கருத்தைக் கூறியுள்ளார். இதுமட்டுமின்றி எல்லாமே ஒரு நம்பிக்கை தான், ஆத்மா மற்றும் பரமாத்மாவுக்கு இடையேயான அன்பே மக்களின் நம்பிக்கையாக உள்ளது என்றார். இதுமட்டுமின்றி நம்பினால் தான் அது கடவுள் இல்லை என்றால் அது வெறும் கற்சிலை தான். எல்லாமே நம்பிக்கை அடிப்படையில் தான் உள்ளது. கடவுள் இருக்கிறது என்கிறோமோ இல்லை என்கிறோமோ ஆனால் தர்க்கரீதியாக ஒரு முடிவுக்கு வரவேண்டும்.
எதையும் அறிவுப்பூர்வமாக சிந்திக்க வேண்டும், ஒருவேளை நீங்கள் கடவுள் இல்லை என்பதை நம்ப தொடங்கி விட்டால் உங்களது அறிவு திறன் அதிகரிக்கிறது என்று அர்த்தம். இங்கு நம்மில் பலர் பஜ்ரங்கபலி வழிபட்டுதான் நமக்கு சக்தி வருவதாக நம்புகிறோம், ஏன் முஸ்லிம்கள் கிறிஸ்தவர்கள் பலசாலிகளாக இல்லையா? இவ்வாறு அவர் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். அவருக்கு எதிராக பலர் அவரது உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.