செம ‘சூப்பர்’… பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர் எல். முருகன் தந்த ‘வாவ்’ பரிசு

Published : Oct 05, 2021, 07:42 AM IST
செம ‘சூப்பர்’… பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர் எல். முருகன் தந்த ‘வாவ்’ பரிசு

சுருக்கம்

டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல். முருகன் அவருக்கு திருக்குறள் புத்தகத்தை பரிசாக வழங்கினார்.

டெல்லி:  டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல். முருகன் அவருக்கு திருக்குறள் புத்தகத்தை பரிசாக வழங்கினார்.

அண்மையில் மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டு மேலும் பலர் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு இலாகாக்களும் ஒதுக்கப்பட்டன. ஆச்சரியப்படத்தக்க வகையில் தமிழக பாஜக தலைவராக இருந்த எல். முருகனுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி அளிக்கப்பட்டது.

குறுகிய காலத்தில் மாநில தலைவர் பதவி, அதனை தொடர்ந்து மத்திய இணை அமைச்சர் பதவி என்ற அவரது வளர்ச்சி ஒரு பக்கம் கட்சிக்குள்ளே சிலருக்கு அதிருப்தியை தந்தாலும் எல். முருகனுக்கு வாழ்த்துகள் குவிந்தன.

மத்தியபிரதேசத்தில் இருந்து பாஜக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். கடந்த 1ம் தேதி எம்பியாகவும் அவர் பதவி ஏற்றுக் கொண்டார்.

இந் நிலையில் எம்பியாக பதவியேற்றதை தொடர்ந்து, பிரதமர் மோடியை எல். முருகன் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது பிரதமருக்கு பொன்னாடை போர்த்து மகிழ்ச்சி அடைந்தார். கூடவே அவருக்கு நினைவு பரிசாக திருக்குறள் புத்தகத்தை வழங்கி அசத்தினார்.

PREV
click me!

Recommended Stories

புது ட்விஸ்ட்..! விஜய் கூட்டணிக்கு வருவார்..! எடப்பாடி பழனிசாமி போடும் பக்கா ரூட்..! ஆட்டத்தை ஆரம்பித்த அதிமுக..!
ராஷ்ட்ரபதிபவன் விருந்தில் லெக் பீஸ் எங்கே.! கேள்வி எழுப்பிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்.!