திடீரென தேவையற்ற பிரச்னையை கிளப்புவது நல்லதல்ல.. ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்துங்க.. டிடிவி.தினகரன்.!

Published : Feb 01, 2022, 07:49 AM IST
திடீரென தேவையற்ற பிரச்னையை கிளப்புவது நல்லதல்ல.. ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்துங்க.. டிடிவி.தினகரன்.!

சுருக்கம்

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து மறு ஆய்வு வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் மத்திய நீர்வள ஆணையம் அறிக்கை அளித்திருப்பது கண்டனத்திற்குரியது.

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து மறு ஆய்வு வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் மத்திய நீர்வள ஆணையம் அறிக்கை அளித்திருப்பது கண்டனத்திற்குரியது என டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.

முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பான மறு ஆய்வு உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என மத்திய நீர்வள ஆணையம் மற்றும் அணை கண் காணிப்பு குழு உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளன. இதற்கு தமிழக அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து மறு ஆய்வு வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் மத்திய நீர்வள ஆணையம் அறிக்கை அளித்திருப்பது கண்டனத்திற்குரியது.

இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து மறு ஆய்வு வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் மத்திய நீர்வள ஆணையம் அறிக்கை அளித்திருப்பது கண்டனத்திற்குரியது.

ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நிபுணர்க் குழுவினர் ‘முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பானது’ என்று உறுதிபட தெரிவித்துவிட்ட பிறகும் திடீரென தேவையற்ற பிரச்னையைக் கிளப்புவது நல்லதல்ல. இதனால், தமிழக - கேரள மக்களிடையே தேவையற்ற கசப்புணர்வே ஏற்படும்.

எனவே, மத்திய நீர்வள ஆணையம் நடுநிலையோடு நடந்து கொண்டு, தமது அறிக்கையைத் திரும்பப் பெற வேண்டும். இந்தக் கோரிக்கையை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தும் வகையில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வலுவான எதிர்வினை ஆற்ற வேண்டும் என்று டிடிவி தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Annamalai Exit: பாஜகவை விட்டு அண்ணாமலை வெளியேற இதுதான் காரணமா? டெல்லி கூட்டத்தில் கசிந்த அதிர்ச்சி தகவல்!
Trichy East By Election: தனித்தனியாய் தட்டித்தூக்கும் விஜய்.! திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் களமிறங்கும் அதிமுக வாரிசு.!