துரோகம் செய்வது 'அதிமுக' தான்.. நாங்க தப்பிச்சிட்டோம்..ஆனா பாஜக..? பாமக திலகபாமா அதிரடி

Published : Feb 01, 2022, 07:22 AM IST
துரோகம் செய்வது 'அதிமுக' தான்.. நாங்க தப்பிச்சிட்டோம்..ஆனா பாஜக..? பாமக திலகபாமா அதிரடி

சுருக்கம்

தமிழகத்தில் வருகிற 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரேகட்டமாக நடைபெறுகிறது.

திண்டுக்கல் மாநகராட்சியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் மாநில பொருளாளர் திலகபாமா. அப்போது பேசியர் அவர், ‘திண்டுக்கல் மாநகராட்சியில் 48 வார்டுகளிலும் பாமக போட்டியிட்டு வெற்றிபெறும். முதல் வேட்பாளர் பட்டியலை நாங்கள் வெளியிட்டு சாதனை படைத்துள்ளோம். 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கீடு கூறியுள்ளார்கள். 

50% பெண்கள் போட்டியிடுவார்கள். அதிமுகவுடன் திமுகவுடன் கூட்டணி சேராமல் தனித்து போட்டியிடும் முடிவை நாங்கள் வரவேற்கிறோம். மற்றவர்கள் எங்கள் மூலம் பயன் அடைந்தார்கள், என்பது நிசப்தமான உண்மை. அதிமுகவினர் பாமகவுக்கு துரோகம் செய்து விட்டார்கள் என்பது கடந்த தேர்தலில் தெரிந்தது. இதனால் நாங்கள் பாடம் கற்றுக் கொண்டோம். அதனால்தான் நாங்கள் தனித்துப் போட்டு இருக்கிறோம். 

தனித்துப் போட்டியிட்டு எங்களுடைய செல்வாக்கை நாங்கள் சோதனை செய்ய உள்ளோம். பாமக மக்களுக்கு எப்போதும் தொண்டு செய்யும் கட்சி. அதே தொண்டு தொடர்வதற்கு திண்டுக்கல் மாநகராட்சியை முதல் மாநகராட்சியாக பாமக கைப்பற்றும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. 48 வார்டுகளிலும் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெறுவோம், என்றார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு முக்கிய அரசு பதவி! விஜய் முடிவின் பின்னணி இதுதான்! பரபரப்பு தகவல்!
Government scheme: பெண் குழந்தைகளுக்கு அரசு தரும் ரூ.50,000.! யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா?