சென்னையில் 1 வார்டு வாங்கிட்டோம்.. திமுக - விசிக கூட்டணி பங்கீடு.. இழுபறி நிலைக்கு என்ன காரணம் ?

Published : Feb 01, 2022, 06:01 AM IST
சென்னையில் 1 வார்டு வாங்கிட்டோம்.. திமுக - விசிக கூட்டணி பங்கீடு.. இழுபறி நிலைக்கு என்ன காரணம் ?

சுருக்கம்

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு  சென்னை அண்ணாநகர் தொகுதியில் உள்ள வார்டு எண் 107 முதல் இடமாக உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

வரும் பிப்ரவரி 19ஆம் தேதி ஒரேகட்டமாக நகர்ப்புற  உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் தேர்வில் மும்முரம் காட்டி வருகின்றன. சில இடங்களில் கூட்டணி கட்சிகளுடன் சீட் பங்கீடு விஷயத்தில் இழுபறி நீடித்து வருகிறது. 

நகர்ப்புற உள்ளாட்சித்  தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியல், தொகுதிப் பங்கீடு ஆகிய பணிகளில் மும்முரம் காட்டி வருகிறது. 

தேமுதிக, அதிமுக கட்சிகள் சார்பில் வேட்பாளர் பட்டியல் தொடர்ச்சியாக வெளியாகி வரும் நிலையில், விடுதலை சிறுத்தை கட்சி சென்னையில் போட்டியிடும் இடம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு  சென்னை அண்ணாநகர் தொகுதியில் உள்ள வார்டு எண் 107 முதல் இடமாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது. 

திமுக - விசிக கூட்டணி குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதன்படி, விசிக சென்னை மட்டுமல்லாது தமிழகம் முழுக்க தேர்தல் நடைபெறும் இடங்களில் இரட்டை இலக்க எண்ணிக்கையிலான சீட்களை கேட்பதாகவும், அதற்கு திமுக தரப்பில் ஒற்றை எண்ணிக்கையில் தான் தர முடியும் என்று கூறியிருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எச்.ராஜா மீது 3 பிரிவுகளில் பாய்ந்தது வழக்கு..! காவல்துறை அதிரடி!
தவெக அலுவலகம் பிரமாதம்..! அறிவாலயம் போனா சுடுகாடு மாதிரி இருக்கும்.. நாஞ்சில் சம்பத் அதிர்ச்சி பேச்சு