
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழகத்தில் நடைபெற்று வரும் அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. சசிகலா மற்றும் ஓபிஎஸ் இடையே எழுந்த அதிகாரப் போட்டியில் எம்எல்ஏக்கள் கடத்தி சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டத்தால் அவரால் முதலமைச்சராக முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அதே நேரத்தில் முழு பெரும்பான்மை இருக்கும் நிலையில் கடந்த ஒரு வாரமாக சசிகலா தரப்பை ஆட்சி அமைக்க அழைக்காமல் இருக்கிறார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இதை வலியுறுத்தியிருந்தனர். இந்த சூழ்நிலையில்தான், அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சி அமைக்க அழைக்ககோரி நேற்று ஆளுநரை சந்தித்திதனர்.
ந்நிலையில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் இன்னும் 2 அல்லது 3 நாளில் முடிவுக்கு வரும் என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்கி தெரிவித்துள்ளார்.
ஆட்சியமைப்பது தொடர்பாக சட்டப்பேரவையில் வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிடலாம் என்றும் வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
பெரும்பான்மை எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ள தலைவர் அடுத்த முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொள்வார் என்றும் முகுல் ரோத்கி கருத்துத் தெரிவித்தார்.