முக்குலத்தோர் புலிப்படை அதிமுக கூட்டணியில் தொடர்கிறது.. விரைவில் சசிகலாவை சந்திப்பேன்.. கருணாஸ் அதிரடி.

By Ezhilarasan BabuFirst Published Jan 29, 2021, 11:27 AM IST
Highlights

சசிகலாவை சந்திப்பது குறித்து கேள்விக்கு பதில் அளித்த கருணாஸ், சசிகலா அவர்களை சந்திக்க நேரம் கேட்கப்படும், நேரம் ஒதுக்கும் பட்சத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து அவரின் உடல் நலம் குறித்து விசாரிச்சிட்டு வருவோம் என்றார்.  

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு செல்லும் வழியில் விருதுநகரில் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் எம்எல்ஏ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை அரசு அரசு விழாவாக நடத்தப்படும் என முதல்வர் அறிவித்தது ரொம்ப மகிழ்ச்சியான செய்தி. ஒட்டுமொத்த தமிழகம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவும் வரவேற்க வேண்டிய ஒரு நற்செய்தி என்றார். மேலும் பேசிய கருணாஸ், மக்கள் பிரச்சனைய தீர்ப்பேன் என்று சொல்லக்கூடியவர்கள் யாராக இருந்தாலும் மக்களுடைய பிரச்சனைகளை தீர்ப்பேன் என்று சொல்லக் கூடிய அரசியல் தலைவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை முக்குலத்தோர் புலிப்படை வரவேற்க்கும் என்றார்.  

சசிகலாவை சந்திப்பது குறித்து கேள்விக்கு பதில் அளித்த கருணாஸ், சசிகலா அவர்களை சந்திக்க நேரம் கேட்கப்படும், நேரம் ஒதுக்கும் பட்சத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து அவரின் உடல் நலம் குறித்து விசாரிச்சிட்டு வருவோம் என்றார். அதிமுக கூட்டணியில் தற்போது வரை முக்குலத்தோர் புலிப்படை அங்க வகிப்பதாகவும் தெரிவித்த கருணாஸ், தற்போது வரை கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெறவில்லை எனவும் ஆனால் அதிமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகள் பேரம் நடத்துவதாகவும் குற்றம் சாட்டினார். சசிகலாவுக்கு ஜெயலலிதா மீது அன்பும் பற்றும் இருந்தால், அதிமுக கட்சிக்கும், அதிமுக சின்னத்திற்கும் எந்த பாதிப்பும் வராமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் இல கணேசன் கூறியிருப்பது மிகவும் அபத்தமான ஒரு கருத்து. இந்த கருத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன் என கருணாஸ் கூறினார். 

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வாய்வழியாக கூறிய வார்த்தையும், அவர்கள் கையெழுத்திட்டு உத்தரவிட்ட அந்த அரசாணையையும் நடைமுறைப் படுத்த வேண்டும் இந்த அம்மாவினுடைய அரசு என்பது தான் எங்களுடைய இருபத்தி ஆறு ஆண்டு கால கோரிக்கை எனவும் 
பிற்படுத்தப்பட்ட மக்களின் 25 சதவீத இட ஒதுக்கீடு கோரிக்கை நிராகரிக்கப்படும் பட்சத்தில், அதே சமயம் அரசியல் சுயநலத்துக்காக யாராவது ஒரு சமுதாயத்துக்கு என்று தனியாக இந்த அரசு ஏதாவது ஒன்றை அறிவித்தால், தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்ட சமூகமும் முக்குலத்தோர் புலிப்படையும் இதுவரை தமிழகத்தில் கண்டிராத போராட்டத்தை காண நேரிடும் என்றார்.
 

click me!