கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெற எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்... பிரதமர் மோடி வேண்டுகோள்..!

By vinoth kumar  |  First Published Jan 29, 2021, 11:18 AM IST

நாடாளுமன்ற கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெற, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒத்துழைப்பு அளிப்பார்கள் என நம்புகிறேன் என பிரதமர் மோடி கூறியுள்ளார். 


நாடாளுமன்ற கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெற, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒத்துழைப்பு அளிப்பார்கள் என நம்புகிறேன் என பிரதமர் மோடி கூறியுள்ளார். 

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பாக பிரதமர் மோடி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- 2021-ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியாவிற்கு சிறந்த எதிர்காலம் கிடைக்க, இந்த ஆண்டு முக்கியமானது. கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெற, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒத்துழைப்பு அளிப்பார்கள் என நம்புகிறேன். பட்ஜெட் கூட்டத்தொடர் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமானது. 

Tap to resize

Latest Videos

undefined

அனைத்து கட்சிகளின் கருத்தும் வரவேற்கப்படுகிறது. கூட்டத்தொடரில் அனைத்து விவகாரங்களும் விவாதிக்கப்படும். தேசத்தின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப விவாதத்தில் பங்கெடுத்து கொள்ள வேண்டும். மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் எந்த தடையும் இருக்கக்கூடாது. இது பட்ஜெட் கூட்டத்தொடர். இந்தியாவின் வரலாற்றில், 2020ம் ஆண்டில், பல்வேறு சலுகைகள் வாயிலாக 5 மினி பட்ஜெட்டை நிதியமைச்சர் தாக்கல் செய்துள்ளார். 

அந்த மினி பட்ஜெட்டை ஒரு அங்கமாக இந்த பட்ஜெட் இருக்கும் என நம்புகிறேன். நாடாளுமன்ற விவாதங்கள் ஆக்கப்பூர்வமானதாக அமைய வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். 

click me!