நடைபாதை வியாபாரிகள் முதல் சிறு குறு தொழில் முனைவோர்கள் வரை வரவேற்கும் அதிமுக தேர்தல் அறிக்கை

Published : Mar 18, 2021, 07:40 PM IST
நடைபாதை வியாபாரிகள் முதல் சிறு குறு தொழில் முனைவோர்கள் வரை வரவேற்கும் அதிமுக தேர்தல் அறிக்கை

சுருக்கம்

அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் நடைபாதை வியாபாரிகளுக்கு வட்டியில்லா சுழல் நிதி, வணிகர்களுக்கு தொழில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மின் சலுகை 250ஆக உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதற்கு அனைத்து வியாபாரிகளும் சிறு குறுந்ததொழில் முனைவோர்களும் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.   

அ.தி.மு.க தேர்தல் அறிக்கை மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே கடந்த 14ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் பெண்கள், விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்து தரப்பினருக்கும் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில் நடைபாதை வியாபாரிகளின் நலன் காத்திடும் வகையில் அவர்களுக்கு 10, 000 ரூபாய் வட்டியில்லா சுழல் நிதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது சிறு வியாபாரிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தங்களது வாழ்வாதாரத்தை மீட்கும் வகையில் இந்த அறிவிப்பு அமைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். அதே போல், சிறு குறு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வரும் மின் சலுகை 200 குதிரை திறனில் இருந்து 250 குதிரை திறனாக உயர்த்தி வழப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சிறு மற்றும் குறுந் தொழில் நடத்துவோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். சிறு வியாபாரிகள் முதல் சிறு குறு தொழில் புரிபவர்கள் வரை அனைவரும் அ.தி.மு.கவின் தேர்தல் அறிக்கையை பாராட்டி வரவேற்பு தெரிவிக்கின்றனர். இதன் மூலம் அ.தி.மு.க தேர்தல் அறிக்கை சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.கவிற்கு வெற்றியை தேடித் தரும் கதாநாயகனாக உருவெடுத்துள்ளது. 

PREV
click me!

Recommended Stories

நாளை தவெக வில் சேருகிறார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்..! டெல்டாவை தட்டி தூக்க பக்கா ஸ்கெட்ச்
ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!