கமலுக்கு பின்னால் இருப்பது யாரு தெரியுமா?... உலக நாயகனை நாறு நாராய் கிழித்த மன்சூர் அலிகான்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Mar 18, 2021, 05:47 PM ISTUpdated : Mar 18, 2021, 05:48 PM IST
கமலுக்கு பின்னால் இருப்பது யாரு தெரியுமா?... உலக நாயகனை நாறு நாராய் கிழித்த மன்சூர் அலிகான்...!

சுருக்கம்

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடாதது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், நான் கமல் ஹாசனின் ரசிகன். அவர் அந்த தொகுதியில் போட்டியிடுவதாக கேள்விப்பட்டேன். அதனால் தான் தொண்டார்முத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறேன். 

நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மன்சூர் அலிகான் வர உள்ள சட்டமன்ற தேர்தலில் அக்கட்சி தனக்கு சீட் கொடுக்காததால் அதிலிருந்து விலகினார். அதன் பின்னர் தமிழ் தேசிய புலிகள் கட்சி என்ற கட்சியை தொடங்கினார். ஆனால் கட்சியை பதிவு செய்ய கால அவகாசம் இல்லாததால் தேர்தலில் போட்டியிட முடியவில்லை என தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் சுயேட்சையாக போட்டியிட மன்சூர் அலிகான் மனு தாக்கல் செய்தார். 

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மன்சூர் அலிகான், “கோவை தெற்கு தொகுதியில் தான் முதலில் போட்டியிடலாம் என இருந்தேன். தமிழ் தேசிய புலிகள் கட்சியை ஆரம்பித்து மிக, மிக குறுகிய காலக்கட்டம். அதனால் தனியொருவனாக தேர்தலை சந்திக்க இருக்கிறேன். தொண்டாமுத்தூர் தொகுதி மக்களிடம் எனது வாக்குறுதிகள் என்ன என்பதை பத்திரத்தில் எழுதி கையெழுத்திட்டு கொடுப்பேன். இரண்டு வருடத்திற்குள் பிரச்சனைகளை சரி செய்ய முடியாவிட்டால் பதவியை ராஜினாமா செய்துவிடுவேன். உங்களில் ஒருவனாக சேவையாற்றுவேன். நான் மக்களிடம் வேலை கேட்டு வந்துள்ளேன். எனக்கு வாய்ப்பு கொடுத்தால் இந்த தொகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பேன். 

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடாதது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், நான் கமல் ஹாசனின் ரசிகன். அவர் அந்த தொகுதியில் போட்டியிடுவதாக கேள்விப்பட்டேன். அதனால் தான் தொண்டார்முத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறேன். நான் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடும் போது செய்தவைகளை தான் கமல் இப்போது செய்து காட்டி வருகிறார். இந்த தொகுதியில் மிகப்பெரிய பண முதலைகள் போட்டியிடுகிறேன். கமல் ஹாசன் கூட ஹெலிகாப்டரில் தானே வந்து இறங்குகிறார். கவர்ச்சி அரசியலை வைத்துக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாது. நான் நாயகன் என்பதால் என்னை முதலமைச்சர் ஆக்குங்கள் என்பது முட்டாள் தனம். கமல் மீது பி டீம் என விமர்சனம் எழுகிறதா? இல்லையா? என சகட்டுமேனிக்கு கமலை வறுத்தெடுத்தார். 

PREV
click me!

Recommended Stories

விஜய் கை ஓங்கிவிடக்கூடாது..! வேகத்தைக் கூட்டும் பாஜக..! அண்ணாமலைக்கு முக்கியப் பொறுப்பு..!
ஓ.பி.எஸ் அப்செட்..! அமித் ஷா- விஜய்க்கு லாக்..! புதுக்கணக்கு போடும் இபிஎஸ்..!