வெளிநாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்வது இந்திய மக்களுக்கு செய்யும் துரோகம்.. மருத்துவர்கள் சங்க கண்டனம்.

By Ezhilarasan BabuFirst Published Mar 18, 2021, 5:32 PM IST
Highlights

நமது நாட்டு மக்களுக்கே தடுப்பூசி போதுமான அளவு இல்லாத போது , 72 நாடுகளுக்கு 6.5 கோடி தவணை முறையில்  தடுப்பூசிகளை வழங்கியது, இந்திய மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகமாகும் 

நமது நாட்டு மக்களுக்கே தடுப்பூசி போதுமான அளவு இல்லாத போது , 72 நாடுகளுக்கு 6.5 கோடி தவணை முறையில்  தடுப்பூசிகளை வழங்கியது, இந்திய மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகமாகும் என சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர். இரவீந்திரநாத் குற்றம்சாட்டடியுள்ளார்.

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கரோனாவின் இரண்டாவது அலை நாடு முழுவதும் ஏற்பட்டுவருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றார். மூன்று கோடி முன்களப் பணியாளர்களுக்கும், 50 வயதிற்கும் மேற்பட்ட 27 கோடி மக்களுக்கும்  6 மாத கால அளவில் கரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று  மத்திய அரசு முதலில் அறிவித்தது. பின்னர், அதை 60 வயதினருக்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டுமே சான்றிதழ் இன்றி வழங்கப்படும் என மாற்றியது.  இந்த மாற்றத்தை ஏன் செய்தது? இதனால்  இளம் வயதில் இணை நோயுள்ள, வேலைக்குப்போய் வருமானம் ஈட்ட வேண்டிய சூழலில் உள்ள பல கோடி பேர்கள் தடுப்பூசி பெற முடியாத சிக்கல் உள்ளது. 

அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என அறிவித்துவிட்டு, தனியார் மருத்துவ மனைகளில் கட்டணம் வசூலிப்பது ஏன்? மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில், கொரோனா  தடுப்பூசிக்கென அறிவிக்கப் பட்ட ரூபாய் 35, 000 கோடி எந்த வயதைச் சார்ந்தவர்களுக்கானது? இன்றைய நிலையில் ஏறத்தாழ 6 கோடி தவணை தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.இது இந்திய மக்களுக்கு வழங்கப்பட்டதைவிட, இரண்டு மடங்காகும். நமது நாட்டு மக்களுக்கே தடுப்பூசி போதுமானஅளவு இல்லாத போது , 72 நாடுகளுக்கு 6.5 கோடி தவணை தடுப்பூசிகளை வழங்கியது, இந்திய மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகமாகும். 

தமிழக அரசு வெளியிட்ட அரசு அணையை மீறிவருகிறது, இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி, ஈரோடு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களிடம் பழைய கட்டணத்தையே மீண்டும் கட்டாயப்படுத்தி வசூலிக்கிறது, பழைய நிலுவைத் தொகைககளை கட்டிட வேண்டும் என நிர்பந்தம் செய்வதையும் உடனடியாக கைவிட வேண்டும். கட்டண வசூலை உடனடியாக நிறுத்திட வேண்டும். இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கான தேர்வுகளை, தமிழ்நாடு  டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழகம் மூலம் நடத்திட வேண்டும். அண்ணாமலைப் பல்கலைக் கழகம் தேர்வுகளை நடத்திடக்கூடாது. 

அகில இந்தியத் தொகுப்பிற்கு தமிழக அரசு வழங்கும் இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு  50 விழுக்காடு இட ஒதுக்கீட்டை  வழங்கிட வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்தாமல்  மத்திய அரசு இழுத்தடிப்பது சமூக நீதிக்கு எதிரானது என்றார். இது கடும் கண்டனத்திற்குரியது. இதை நடைமுறை படுத்திட வேண்டும். மத்திய அரசு, உடனடியாக மாநில அரசுகள் வழங்கும் இடங்களில் இதர பிற்படுத்தப்படோருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை வழங்கிட வேண்டும். அரசியல் கூட்டங்களில் கொரோனா முன்னெச்சரிக்கையை பின்பற்றுவதில்லை. பின்பற்றவேண்டியது முக்கியமாகும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவேண்டும்" என தெரிவித்தார்.  

 

click me!