எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது ஆதாரமின்றி குற்றச்சாட்டு... வழக்கறிஞர் மறுப்பு..!

Published : Jul 22, 2021, 12:46 PM IST
எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது ஆதாரமின்றி குற்றச்சாட்டு... வழக்கறிஞர் மறுப்பு..!

சுருக்கம்

எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது ஆதாரமின்றி குற்றம் சாட்டப்பட்டுள்ளது. விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம்

போக்குவரத்து துறை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது ஆதாரமின்றி குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் 5 மணி நேரமாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் ரெய்டு நடக்கும் 20 இடங்களில் 3 டி.எஸ்.பிக்கள் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர். 

காலை 7 மணி முதல் சென்னை மற்றும் கரூரில் உள்ள விஜயபாஸ்கரின் வீடு, சாயப்பட்டறை என 21 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை ஆர்யபுரத்தில் உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீட்டில் இருந்த காரிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை செய்தனர்.

விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அவர் மீது சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில், ஆர்.ஏ., புரத்தில் உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீட்டிற்கு வருகை தந்த அவரது வழக்கறிஞர் செல்வம், எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது ஆதாரமின்றி குற்றம் சாட்டப்பட்டுள்ளது. விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம்’’ எனத் தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!