இன்னைக்கு இப்படியொரு சிறப்பான நாளா?... தயாநிதி மாறன் எம்.பி. பகிர்ந்த சுவாரஸ்ய செய்தி...!

By Kanimozhi PannerselvamFirst Published Jul 17, 2021, 12:41 PM IST
Highlights

1996ல் இதே நாளில் தான் அப்போதைய முதலமைச்சர்  கருணாநிதி சென்னை என பெயர் சூட்டினார். அதனை திமுக மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நினைவு கூர்ந்துள்ளார். 

1639ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்தவர்கள் சென்னையில் கால் பாதித்த போது, முதல் முறையாக செயிண்ட் ஜார்ஜ் கோட்டை உள்ள இடத்தை வாங்கினர். அந்த இடத்தை தங்களுக்கு விற்ற சென்னப்ப நாயக்கர் நினைவாக, கோட்டைக்கு வடக்கே உள்ள ஊர் சென்னைப் பட்டினம் என பெயரிடப்பட்டது.16ம் நூற்றாண்டில் போர்ச்சுக்கீசியர்கள் சென்னை வந்த போது மெட்ராஸ் என்று அழைக்க ஆரம்பித்தனர். அதன் பின்னர் ஆங்கிலேயர்கள் 1688-யில் மதராஸ் மாகாணத்தை உருவாக்கினர். 

இந்திய சுதந்திரம் பெற்ற பிறகு மதராஸ் மாகாணத்தின் தலைநகராக மெட்ராஸ் தேர்வு செய்யப்பட்டது. அதன் பின்னர் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்படும் வரையிலும் மதராஸ் மாகாணம் என்றே அழைக்கப்பட்டு வந்தது. பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு அண்ணா தலைமையில் திமுக ஆட்சி பெறுப்பேற்ற 1967ம் ஆண்டு அப்போதைய மதராஸ் மாகாணத்திற்கு  ‘தமிழ்நாடு’ என பெயர் சூட்டக்கோரிய தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, 1968ம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி தமிழ்நாடு என அழைக்கக்கோரும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. அதன் பின்னர் 1969ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி முதல் அண்ணாவின் விடாமுயற்சியால் ‘மதராஸ் மாகாணம்’ தமிழ்நாடு என அழைக்கப்பட்டது. 

மாநிலத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்டாலும் சென்னை, மெட்ராஸ் என இருவேறு பெயர்களால் அழைக்கப்பட்டு வந்தது. 1996 ஜூலை 17ல், முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில், 'மெட்ராஸ்' என்ற பெயர் அதிகாரபூர்வமாக 'சென்னை' என மாற்றம் செய்யப்பட்டது. மெட்ராஸ் மாகாணம், மெட்ராஸ் பட்டினம், மதராசப் பட்டினம், மதராஸ், சென்னைப்பட்டினம் என பல்வேறு பெயர்களைக் கடந்து தற்போது சென்னை என்ற பெயருடன் மெருகேறி திகழ்கிறது நம் தலைநகரம். 

1996ல் இதே நாளில் தான் அப்போதைய முதலமைச்சர்  கருணாநிதி சென்னை என பெயர் சூட்டினார். அதனை திமுக மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நினைவு கூர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மதராஸ், மெட்ராஸ் என வழக்கத்தில் இருந்த பெயரை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 'சென்னை' என்று அழகு தமிழில் அதிகாரபூர்வமாக அறிவித்த நாள் இன்று” என குறிப்பிட்டுள்ளார். 

மதராஸ், மெட்ராஸ் என வழக்கத்தில் இருந்த பெயரை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 'சென்னை' என்று அழகு தமிழில் அதிகாரபூர்வமாக அறிவித்த நாள் இன்று! pic.twitter.com/tRXsF35g1P

— Dayanidhi Maran தயாநிதி மாறன் (@Dayanidhi_Maran)
click me!