கர்நாடகத்துக்கு அரசியல் ரீதியாக அனுமதி கொடுத்தால் தேவையற்ற பிரச்சனைகள் உருவாகும்.. பாலகிருஷ்ணன் எச்சரிக்கை.

By Ezhilarasan BabuFirst Published Jul 17, 2021, 12:26 PM IST
Highlights

தமிழக அரசின் சார்பில் அனைத்து கட்சிகள் முலமாக 10 பக்கம் கொண்ட மனுவை மத்திய அமைச்சரிடம் தந்தோம். 4 நிபந்தனைகளுடன்தான் கர்நாடக அரசுக்கு வரைவு திட்ட அறிக்கையை தயாரிக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. 

அரசியல் ரீதியாக அதிகாரத்தை பயன்படுத்தி மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதித்தால் தேவையற்ற பிரச்சனைகள் உருவாகும் என சென்னை விமான நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் எச்சரித்துள்ளார். மேகதாது அணை கட்ட கர்நாடகத்துக்கு அனுமதி அளிக்க கூடாது என டெல்லி சென்று மத்திய அமைச்சரை சந்தித்து விட்டு சென்னை  திரும்பிய அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழுவில் இடமுபெற்றிருந்த அவர் இவ்வாறு கூறினார். 

இது குறித்து மேலும் அவர் கூறியதாவது, அணை கட்ட பிடிவாதமாக முயற்சிக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும். அணை கட்ட அனுமதிக்க கூடாது என மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தினோம். தமிழக அரசின் சார்பில் அனைத்து கட்சிகள் முலமாக 10 பக்கம் கொண்ட மனுவை மத்திய அமைச்சரிடம் தந்தோம். 4 நிபந்தனைகளுடன்தான் கர்நாடக அரசுக்கு வரைவு திட்ட அறிக்கையை தயாரிக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. காவிரி மேலாண்மை வாரிய அனுமதி, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் ஒப்பந்தம், வனத்துறை அனுமதி என நடந்தால் ஆய்வு அறிக்கை செய்ய நிபந்தனை விதித்து உள்ளோம். இதில் ஒன்றை கூட கர்நாடக அரசு நிறைவேற்றவில்லை என்று மத்திய  அமைச்சர் சொன்னார்கள். அனுமதி கொடுக்க அதிகாரம் இல்லாத போது எப்படி அனுமதித்தீர்கள்,  முதலில் அதுவே சொல்லாது. 

மத்திய அரசு ஏற்கனவே அனுமதி தந்துவிட்ட பிறகே நியாயப்படுத்தும் வாதங்களை மத்திய அமைச்சர் வைத்தார். மேற்கண்ட அனுமதி பெறாமல் அணை கட்ட வாய்ப்பு இருக்காது என்றார். ஆனால்  பிரதமரை அடிக்கடி கர்நாடக முதல்வர் சந்தித்து பேசுகிறார். மத்தியில் பா.ஜ.க. அரசு இருப்பதால் அதிகாரம் இல்லாத நீர்வள குழுமம், உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு விரோதமாக ஆய்வுக்கு அனுமதி கொடுத்து இருக்கிறது. ஆனால் நீர்வளத்துறை மந்திரி சொன்னது ஒரளவு நம்பிக்கை அளித்தாலும், அரசியல் ரீதியாக அதிகாரத்தை பயன்படுத்துவார்களோ என்ற ஐயம் இருக்கிறது. அரசியல் ரீதியாக பயன்படுத்தினால் தேவையற்ற பிரச்சனையை உருவாக்கும். நடுநிலையாக இருப்போம் என மத்திய மந்திரி தெரிவித்தை பொறுத்திருந்து பார்ப்போம். இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் கூறினார். 
 

click me!