பிரதமரே எங்களப் பாராட்டிட்டாரு... அப்புறம் என்ன? மாஸ் காட்டும் அமைச்சர் மா.சு...!

By vinoth kumarFirst Published Jul 17, 2021, 11:52 AM IST
Highlights

 புதிதாக அமையும் 11 மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை தொடங்குவது குறித்து மத்திய அரசு தமிழகம் வந்து ஆய்வு செய்ய உள்ளது. 

சென்னையை பொறுத்தவரையில் ட்ரோன்கள் மூலம் மருந்து தெளிப்பது, கொசு மருந்து அடிப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

தியாகிகள் தினத்தை ஒட்டி சென்னை கிண்டியிலுள்ள தியாகிகள் மணி மண்டபத்தில் சுகதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- புதிதாக அமையும் 11 மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை தொடங்குவது குறித்து மத்திய அரசு தமிழகம் வந்து ஆய்வு செய்ய உள்ளது. 

தமிழகத்தில் எடுக்கப்பட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பிரதமரே பாராட்டியுள்ளார். சென்னையை பொறுத்தவரையில் ட்ரோன்கள் மூலம் மருந்து தெளிப்பது, கொசு மருந்து அடிப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வீடுகள் தோறும் சென்று தேங்கியிருக்கும் நீரை அப்புறப்படுத்தவும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள விழுப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதன் மூலமாக, டெங்கு பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது என்றார். 

மேலும், போரூர் ஏரியில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், அதற்கு பதிலளித்த அமைச்சர் கடந்த அதிமுக ஆட்சியில் போரூர் ஏரியை மூட முயற்சி நடந்தது என்றும்,  ஸ்டாலின் நடத்திய போராட்டத்தால் தான் தற்போது போரூர் ஏரி இருக்கிறது. அப்போது பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தவர் தான் ஓ.பன்னீர்செல்வம் என்று குறிப்பிட்டார். போரூர் ஏரியில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை விடுத்துள்ளார். 

click me!