வாகன ஓட்டிகளே தயாரா இருங்க.. இது அனைத்தும் மாறப்போகுதாம்.. மத்திய அமைச்சர் வெளியிட்ட பரபரப்பு தகவல்.

By Ezhilarasan BabuFirst Published Oct 5, 2021, 9:14 AM IST
Highlights

போக்குவரத்து விதி மீறல்கள், அதனால் ஏற்படும் வாகன விபத்துக்கள் ஒருபுறம் பெரும் சவாலாக இருந்து வரும் அதேநேரத்தில், மறுபுறம் அதிக டெசிபல் ஒலி எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்துவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு எரிச்சலுக்கும் ஆளாகி வருகின்றனர்.

வாகனங்களில் உள்ள ஹாரன் சத்தத்தை மாற்றும் வகையில் இந்திய இசைக் கருவிகளின் சத்தம் மட்டுமே இனி வாகனங்களில் ஹாரன் சத்தமாக பயன்படுத்தும் வகையில் சட்டம் கொண்டுவர உள்ளதாக மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தகவல் தெரிவித்துள்ளார். உலகின் மிகப் பெரிய மக்கள் தொகை கொண்ட நாடுகளில் சீனாவை பின்னுக்கு தள்ளும் வகையில்  போட்டி போட்டுக் கொண்டு முன்னேறி வருகிறது இந்தியா. அதேபோல மக்கள் தொகைக்கு ஏற்ப இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை அதிகம் பயன்படுத்தும் நாடாகவும் இருந்து வருகிறது. 

போக்குவரத்து விதி மீறல்கள், அதனால் ஏற்படும் வாகன விபத்துக்கள் ஒருபுறம் பெரும் சவாலாக இருந்து வரும் அதேநேரத்தில், மறுபுறம் அதிக டெசிபல் ஒலி எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்துவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு எரிச்சலுக்கும் ஆளாகி வருகின்றனர். 70 டெசிபல் அளவு ஒலி எழுப்பும் ஹாரன்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என விதிமுறை இருந்தும், 80-90 டெசிபலுக்கு மேல் ஒலி எழுப்பும் ஹாரன்கள் பயன்படுத்தும் நிலைமை இருந்து வருகிறது. இதனால் காது கேளாமை, ஒலி மாசு போன்ற பிரச்சனைகளுக்கு மக்கள் ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் இது அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி  முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். 

இதையும் படியுங்கள்:  1 வருஷமா பாஜகவில் கசப்புடன்தான் இருக்கிறேன்.. வாங்க வாங்கன்னு கூப்பிட்டாங்க, ஒன்னும் இல்ல.. குமுறும் ராதாரவி.

அதாவது, நாசிக்கில் நெடுஞ்சாலைத் திட்டம் ஒன்றை திறந்து வைத்துப் பேசிய கட்கரி, வாகனங்களில் இந்திய இசைக் கருவிகளின் சப்தம் மட்டுமே ஹாரன் சத்தமாக பயன்படுத்தப்பட வேண்டும் என்று விரைவில் சட்டத் திருத்தம் கொண்டு வர உள்ளதாக அவர் கூறியுள்ளார். அதிலும் குறிப்பாக அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பப்படும் இசையும் ஒன்றாக மாற்றுவது குறித்தும் ஆலோசித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதை படியுங்கள்: இரவெல்லாம் வச்சு செய்த மழை.. பகலிலும் தொடர்கிறது.. உற்சாகத்தில் சென்னை, புறநகர் மக்கள்.

அதேபோல அமைச்சர்களின் வாகனங்கள் கடந்து செல்லும் போது முழு அளவில் சைரன் ஒலிக்க படுவதால் மக்கள் எரிச்சல் அடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அனைத்து வாகனங்களின் ஹாரன் சத்தமும் புல்லாங்குழல், தபலா போன்ற  இந்திய இசை கருவிகளின் இசையாக மட்டும் இருக்க வேண்டும் என சட்டம் கொண்டு வர திட்டமிட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அவரின் இந்த அறிவிப்பு பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.

 

click me!