இரவெல்லாம் வச்சு செய்த மழை.. பகலிலும் தொடர்கிறது.. உற்சாகத்தில் சென்னை, புறநகர் மக்கள்.

By Ezhilarasan BabuFirst Published Oct 5, 2021, 8:47 AM IST
Highlights

தமிழகத்தில் தென்மேற்கு  வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த மூன்று தினங்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. அந்த மழை காலையிலும் தொடர்ந்து நீடித்து வருகிறது, இதனால்  சென்னையில் குளிர்ந்த சூழல் நிலவுவதால் சென்னை வாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த மூன்று தினங்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

அதேநேரத்தில் சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், இந்நிலையில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை முதலே மேகமூட்டம் இருந்து வந்ததுடன், சென்னை மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகள் கும்மிருட்டாக காட்சியளித்தது  அதனையடுத்து நேற்று நள்ளிரவு முதல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த மழை பகலிலும் தொடர்கிறது. 

இதையும் படிங்க: தமிழகமே அதிர்ச்சி.. முதல்வர் ஸ்டாலின் வீட்டின் முன்பு தீக்குளித்து, சிகிச்சை பெற்றுவந்த நபர் உயிரிழப்பு.

அடையாறு, வேளச்சேரி, கிண்டி, எழும்பூர், புரசைவாக்கம், கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம் என சென்னை முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது கடந்த சில நாட்களாக பகலில் வெயில் கொளுத்தி வந்த நிலையில் தற்போது சென்னையில் மழையின் காரணமாக இதமான சூழல் நிலவுகிறது. இதனால் சென்னைவாசிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 

click me!