மோர் சூப்பர் மார்கெட்டை தயிர் மார்க்கெட்டா ஆக்கீடாதீங்க... ராமதாஸ் கடுங்கோபம்..!

By Thiraviaraj RMFirst Published Jan 10, 2020, 11:31 AM IST
Highlights

தமிழில் மோர் சூப்பர் மார்க்கெட் என்று  ஒலிபெயர்த்து எழுதியிருக்கிறார்கள். விட்டால் அடுத்து தயிர் சூப்பர்மார்க்கெட் என்று கூட பெயர் வைத்து விடுவர் போலிருக்கிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் ஆத்திரமடைந்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ’’இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் 15 பேரையும், 52 படகுகளையும் விடுவிக்க  சிங்கள அரசு ஒப்புக்கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மீட்கப்படும் படகுகளை சீரமைக்க மீனவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நிதியுதவி அளிக்க வேண்டும்!

திருவள்ளூரில் வாகனத்தில் கடத்தப்பட்ட பெண்ணை மீட்கும் முயற்சியில் உயிரிழந்த யாகேஷ் என்பவரின் தியாகத்தை பாராட்டி அவரது குடும்பத்திற்கு அரசு ரூ.10 லட்சம் அறிவித்திருப்பது பாராட்டத்தக்கது. யாகேஷின் தியாகத்திற்கு இது ஈடாகாது. அவரது குடும்பத்திற்கு வாழ்வாதார உதவிகளையும் வழங்க வேண்டும்.

எம்.ஜி.ஆர் காலத்து அரசாணைப்படி ஒரு கடையின் பெயர் ஆங்கிலத்தில் வைக்கப்பட்டிருந்தால், தமிழில் அப்படியே எழுதாமல் மொழிபெயர்த்து எழுத வேண்டியது கட்டாயம் ஆகும். ஆனால், அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் விருப்பம் போல பெயர் வைத்து, விருப்பமான மொழியில் எழுதுகின்றனர்.

சென்னையில் ஓர் பேரங்காடியின் பெயர் More Supermarket. ஏராளமான பொருட்கள் கிடைக்கும் பேரங்காடி என்பது அதன் பொருள். ஆனால், தமிழில் மோர் சூப்பர் மார்க்கெட் என்று ஒலிபெயர்த்து எழுதியிருக்கிறார்கள். விட்டால் அடுத்து தயிர் சூப்பர்மார்க்கெட் என்று கூட பெயர் வைத்து விடுவர் போலிருக்கிறது!

— Dr S RAMADOSS (@drramadoss)

 

சென்னையில் ஓர் பேரங்காடியின் பெயர்  மோர் சூப்பர் மார்கெட். ஏராளமான பொருட்கள் கிடைக்கும் பேரங்காடி என்பது அதன் பொருள். ஆனால், தமிழில் மோர் சூப்பர் மார்க்கெட் என்று  ஒலிபெயர்த்து எழுதியிருக்கிறார்கள். விட்டால் அடுத்து தயிர் சூப்பர்மார்க்கெட் என்று கூட பெயர் வைத்து விடுவர் போலிருக்கிறது’’எனத் தெரிவித்துள்ளார்.

click me!