கூரியர் மூலம் பணப்பட்டுவாடா... தெறிக்க விட்ட திமுக கூட்டணி வேட்பாளர்..!

By Thiraviaraj RMFirst Published Apr 17, 2019, 5:31 PM IST
Highlights

கூரியர் பாய்ஸ் மூலம், பணப்பட்டுவாடாவை கச்சிதமாக விநியோகித்து முடித்து விட்டார் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிரும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ்கனி என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

கூரியர் பாய்ஸ் மூலம், பணப்பட்டுவாடாவை கச்சிதமாக விநியோகித்து முடித்து விட்டார் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிரும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ்கனி என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

திமுக கூட்டணியில் இந்திய முஸ்லீம் லீக் கட்சி சார்பில் போட்டியிடுகிறார் நவாஸ்கனி. அவரை எதிர்த்து அதிமுக கூட்டணியின் பாஜக சார்பாக நயினார் நாகேந்திரன் களமிறங்கி உள்ளார். அங்கு கடும்போட்டி நிலவுகிறது. இந்நிலையில் துரைமுருகனை தொடர்ந்து கன்னியாகுமரி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார், ராமநாதபுரம் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி அலுவலகங்களில் ரெய்டு நடத்த முடிவெடுத்தது வருமான வரிதுறை.

 

பணப்பட்டுவாடாவை எப்படி நடத்துவது என பாஜக விழிபிதுங்கி நிற்க, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி வேட்பாளர் பணப்பட்டுவாடாவை கன கச்சிதமாக முடித்து விட்டார். அதுவும் கூரியர் பாய்ஸ் மூலம். பிரபலமான எஸ்.டி கூரியர் நிறுவனத்தின் உரிமையாளர். தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கெடுபிடியால், கூட்டணி கட்சியினருக்கு கடைசி நேர, பண பட்டுவாடாவுக்கு, தன் நிறுவனத்தின் ஊழியர்களை களத்தில் இறக்கி விட்டிருக்கிறார்.

ஒரு ஓட்டுச்சாவடிக்கு ஒருத்தர் வீதம், கூட்டணி கட்சியினருக்கு பணத்தை கொடுத்து முடித்து விட்டார்கள். இதில் 'ரிஸ்க்' குறைவு. அத்தோடு இடையில், யாரும் பணத்தை சுருட்டவும் முடியாது. சரியாக போய் சேர்த்தும் விட்டுள்ளனர். 
 

click me!