தமிழக ஆளுநரை தபால்காரரை போல செயல்பட வைத்து விடுவார் போல மோடி.. தமிழக எம்.பி பயங்கர நக்கல்.

By Ezhilarasan BabuFirst Published Oct 22, 2021, 4:04 PM IST
Highlights

அதில், தையல் இயந்திரம், எழை எளிய பெண்களுக்கு புடவை உள்ளிட்ட ஏராளமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அதில் கலந்து கொண்ட கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் செல்லக்குமார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். 

தமிழக ஆளுநரை தபால்காரரை போல செயல்பட வைத்து விடுவார் போல பிரதமர் மோடி என காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் செல்லகுமார் குற்றம் சாட்டியுள்ளது. கல்யாண வீட்டில் தான் தான் மாப்பிள்ளையாக இருக்க வேண்டும், சாவு  வீட்டிலும் தான் தான் கதாநாயகனாக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி நினைக்கிறார் என்றும் அவர் விமர்சித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் கே.எஸ் அழகிரியின்  எழுபதாவது பிறந்த நாளையொட்டி சென்னை சத்தியமூர்த்தி பவனில் 70 கிலோ கேக்வெட்டி கொண்டாடப்பட்டது. 

இதையும் படியுங்கள்:  தமிழக மக்களுக்கு பயங்கர எச்சரிக்கை. குறிப்பா இந்த மாவட்ட மக்கள் அடுத்த 4 நாட்களுக்கு ரொம்ப உஷாரா இருங்க.

அதில், தையல் இயந்திரம், எழை எளிய பெண்களுக்கு புடவை உள்ளிட்ட ஏராளமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அதில் கலந்து கொண்ட கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் செல்லக்குமார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மத்திய அரசு மாநில அரசை முழுவதுமாக தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சிக்கிறது, மொத்தத்தில்  இந்திய அரசியல் அமைப்பை அவர்கள் மதிக்கத் தயாராக இல்லை, ஒரு ரூபாய் செலவு செய்தால் கூட அது மோடி செய்ததாக இருக்க வேண்டும் என்று பாஜகவினர் நினைக்கின்றனர். கல்யாண வீட்டில் மாப்பிள்ளை யாகவும் சாவு வீட்டில் கதாநாயகனாகவும் இருக்கவேண்டும் என மோடி நினைக்கிறார்கள் என அவர் விமர்சித்தார். 

இதையும் படியுங்கள்: அண்ணாமலை.. இனி வேடிக்கை பாரக்க மாட்டேன்.. இடத்தையும் நேரத்தையும் குறி.. அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை.

100 கோடி தடுப்பூசி செலுத்தியதை பெருமையாக ஏற்கும் பாஜக, கொரோனாவால் பல லட்சம் மக்கள் பலியானதையும் ஏற்க வேண்டும் என்றார். பாராளுமன்ற உறுப்பினர் வழங்கப்பட்ட நிதியை முழுமையாக வழங்கப்படவில்லை என தெரிவித்த செல்லகுமார், கொரோனா மரண எண்ணிக்கை அரசு கோப்புகளில் முழுமையாக இல்லை என குற்றம் சாட்டினார். இன்று மாலை தமிழக ஆளுநர் ஆர்.என ரவி டெல்லி செல்ல உள்ளது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் தமிழக ஆளுநரை பிரதமரின் தபால்காரர் போல செயல்பட வைத்துவிடுவார்போல மோடி என்று அவர் நக்கல் அடித்தார்.
 

click me!