தமிழகத்தில் 11 லட்சம் பேருக்கு ஜாக்பாட்... அமைச்சர் வெளியிட்ட அதிரடி தகவல்..!

Published : Oct 22, 2021, 03:16 PM IST
தமிழகத்தில் 11 லட்சம் பேருக்கு ஜாக்பாட்... அமைச்சர் வெளியிட்ட அதிரடி தகவல்..!

சுருக்கம்

ஆளுங்கட்சியினரே பல கோடிகளுக்கான நகைகளை அடகு வைத்துள்ளதாக ஆளும் கட்சியான திமுக குற்றம்சாட்டியது. 

கூட்டுறவு சங்கங்களில் 5 சவரனுக்கு கீழ் நகைக்கடன் பெற்றவர்கள் கடன் தள்ளுபடி குறித்து ஒரு வாரத்தில் அரசாணை வெளியிடப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். 

திமுக தேர்தல் வாக்குறுதிகளில், கூட்டுறவு வங்கிகளில் அடாமானம் வைத்துள்ள 5 லட்சத்துக்கும் குறைவான நகைகளை இலவசமாக மீட்டுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. ஆனால் 7 மாதங்களாகியும் அதுபற்றிய தகவல் வெளியாகவில்லை. மாறாக ஆளுங்கட்சியினரே பல கோடிகளுக்கான நகைகளை அடகு வைத்துள்ளதாக ஆளும் கட்சியான திமுக குற்றம்சாட்டியது. 
 
இந்நிலையில், கூட்டுறவு சங்கங்களில் 5 சவரனுக்கு கீழ் நகைக்கடன் பெற்றவர்கள் கடன் தள்ளுபடி குறித்து ஒரு வாரத்தில் அரசாணை வெளியிடப்படும் என்று  அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டியளித்துள்ளார். சென்னையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நகைக்கடன் தள்ளுபடியால் சுமார் 11 லட்சம் பேர் பயனடைவார்கள். 15 கூட்டுறவு சங்கங்களில் சுமார் 12 கோடி முறைகேடு நடந்துள்ளது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

முக்தார் மீது நடவடிக்கை வேண்டும்.. டெல்லி சென்ற கரு.நாகராஜன்.. ஜி.கே.வாசனிடம் கடிதம்!
மகளிர் உரிமைத் தொகை உயருகிறது..! எவ்வளவு தெரியுமா? முதல்வர் சொன்ன குட்நியூஸ்!