மக்களே கொரோனா தொற்று இன்னும் ஓயவில்லை.. தயவு செய்து தடுப்பூசி போடுங்க.. கதறும் அமைச்சர்.

By Ezhilarasan BabuFirst Published Oct 22, 2021, 1:48 PM IST
Highlights

மீறி குட்கா விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். விவேக் மரணம் கொரோனா தடுப்பூசியால் ஏற்படவில்லை என்பது மீண்டும் உறுதியாக இருக்கிறது என்று கூறினார். 

கொரோனா தொற்றில் இருந்து முழுவதுமாக விடுபட வில்லை என்றும், உலக நாடுகளில் மீண்டும் தொற்று அதிகரிப்பதால் அனைவரும் கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொள்வது அவசியம் என்று தமிழக  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதேபோல் குட்கா பொருட்கள் விற்பனை தமிழகத்தில் 100 சதவீதம் கட்டுப்படுத்த  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார். சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்  மா.சுப்ரமணியன் எலும்பு தானம் விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.

இதையும் படியுங்கள்: தமிழக மக்களுக்கு பயங்கர எச்சரிக்கை. குறிப்பா இந்த மாவட்ட மக்கள் அடுத்த 4 நாட்களுக்கு ரொம்ப உஷாரா இருங்க.

பின்னர் செய்தியாளரை சந்தித்து அவர், காஞ்சிபுரத்தில் புதிதாக பிரத்தியேக புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனை தொடங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறினார். அதேபோல் தமிழகத்தில் மாவட்ட வாரியாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது என்றார். 3 ஆயிரத்து 300 பேரிடம் இருந்து பல்வேறு வகையான உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டு 2750 பேர் பயனடைந்து உள்ளதாக கூறினார். செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி ஓன்றுக்கு பதிலளித்த அவர், குட்கா பொருட்கள் விற்பனையை 100% கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். 

இதையும் படியுங்கள்:  அண்ணாமலை.. இனி வேடிக்கை பாரக்க மாட்டேன்.. இடத்தையும் நேரத்தையும் குறி.. அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை.

மீறி குட்கா விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். விவேக் மரணம் கொரோனா தடுப்பூசியால் ஏற்படவில்லை என்பது மீண்டும் உறுதியாக இருக்கிறது என்று கூறினார். அதேபோல் கொரோனா தொற்று முழுமையாக விடுபடவில்லை என்றும், உலக நாடுகளின் மீண்டும் தொற்று அதிகரிப்பதால் அனைவரும் தடுப்பூசி செலுத்த முன் வரவேண்டும் என்றார். நீட் விலக்கு சட்ட முன்வடிவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் என்றும், ஆளுநர் புதிதாக வந்திருப்பதால் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து முடிவு எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். 
 

click me!