நாடாளுமன்றத்தில் கண்கலங்கிய மோடி. காங் எம்.பி குலாம் நபி ஆசாத் குறித்து உருக்கம். 4 MPக்குளுக்கு பிரியா விடை.

By Ezhilarasan BabuFirst Published Feb 9, 2021, 1:19 PM IST
Highlights

காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலால் குஜராத் மக்கள் சிக்கிக் கொண்டபோது ஆசாத்தின் முயற்சிகளையும், பிரணாப் முகர்ஜியின் முயற்சியையும் நான் ஒருபோதும் மறக்க மாட்டேன்.

குஜராத் மக்கள் ஒரு முறை ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் சிக்கிய போது அவர்களை தனது குடும்பத்தினரைப் போல பாவித்தவர் குலாம்நபி ஆசாத். அவர் நாட்டுக்காக ஆற்றிய பங்கு அளப்பரியது, இந்த நாட்டிற்காக, நாட்டு மக்களுக்காக அவர் ஆற்றிய பங்கை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன் என பிரதமர் மோடி குலாம் நபி ஆசாத்தை பாராட்டி புகழாரம் சூட்டியுள்ளார். காங்கிரஸ் எம்பி குலாம்நபி ஆசாத், ஷம்ஷர் சிங் , மிர் முகமது பயாஸ், நாதிர் அகமது  ஆகிய நான்கு மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் அவர்களுக்கு பிரியாவிடை கொடுக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை (இன்று) மாநிலங்களவையில் உரையாற்றினார்.  அப்போது மோடி உணர்ச்சிவயப்பட்டு உறுப்பினர்களை பாராட்டினார். குறிப்பாக குலாம்நபி ஆசாத் குறித்து பேசிய அவர் உணர்ச்சியின் மிகுதியால் கண்கலங்கினார். 

குலாம் நபி குறித்து அவர் பேசியதாவது:  குலாம்நபி ஜிக்கு பிறகு இந்தப் பதவியை யார் ஏற்றுக்கொண்டாலும் அவரது இடத்தை நிரப்புவதற்கு அவர்கள் பெரும் சிரமத்தை சந்திக்க வேண்டி இருக்கும் என்று நான் கவலைப் படுகிறேன். ஏனென்றால் குலாம்நபி ஜி தனது கட்சியை பற்றி கவலைப்படக் கூடியவர், அதேபோல் நாட்டையும், வீட்டையும் பற்றி  சிந்திக்கக் கூடியவர். எனது அனுபவங்கள் மற்றும் சூழ்நிலைகளின் அடிப்படையில் குலாம் நபி ஆசாத்  அவர்களை நான் பெரிதும் மதிக்கிறேன். அவரது கருணை அமைதி மற்றும் தேசத்திற்கான அயராத உழைப்பு எப்போதும் தொடரும் என நான் நம்புகிறேன். எப்போது அவர் எதை செய்தாலும் அது மதிப்பு மிக்கதாக இருக்கும். குலாம்நபி அவர்கள் முதல்வராக இருந்தபோது நாங்கள் இருவரும் நெருக்கமாக பழிகியிருக்கிறோம். அப்போது குஜராத்தில் சில பயணிகள் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டனர், அதில் 8 பேர் கொல்லப்பட்டனர், அப்போது குலாம் நபி ஜியிடம் இருந்து தான் எனக்கு முதல் அழைப்பு வந்தது. அவர் கண்ணீருடன் அந்த துயரத்தை என்னிடம் பகிர்ந்து கொண்டார். அந்த அளவிற்கு நாட்டின் மீதும் நாட்டு மக்கள் மீதும் பற்றுக் கொண்டவர். 

குலாம் நபி ஆசாத்தை நான் பல ஆண்டுகளாக அறிந்திருக்கிறேன், நாங்கள் ஒரேசமயத்தில் முதல்வராக இருந்திருக்கிறோம், அவர் பல விஷயங்களில் ஆர்வம் காட்டக் கூடியவர், குறிப்பாக தோட்டக்கலை மீது அவருக்கு ஆர்வம் அதிகம். காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலால் குஜராத் மக்கள் சிக்கிக் கொண்டபோது ஆசாத்தின் முயற்சிகளையும், பிரணாப் முகர்ஜியின் முயற்சியையும் நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். அவர்களைத் தனது குடும்பத்தை சேர்ந்தவர்கள் போல அவர்கள் பாவித்தனர். குலாம்நபி ஜி, உண்மையிலேயே சிறந்த மனிதர், அவருக்கு கர்வம் எப்போதும் எப்போதும் இருந்ததில்லை, இவ்வாறு குலாம் நபியை புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தபோதே மோடி கண்கலங்கினார். அரசியல் ரீதியாக பல முக்கிய ஆலோசனைகளை பலமுறை குலாம்நபி ஆசாத் எனக் கூறியுள்ளார். அதை நான் மறக்கவே மாட்டேன். இவ்வாறு அவர் பேசினார்.
 

click me!