சட்டம் தன் கடமையை செய்யும்... சசிகலா மீது நடவடிக்கை எடுப்பது உறுதி.. அமைச்சர் சி.வி.சண்முகம்..!

Published : Feb 09, 2021, 01:12 PM IST
சட்டம் தன் கடமையை செய்யும்... சசிகலா மீது நடவடிக்கை எடுப்பது உறுதி.. அமைச்சர் சி.வி.சண்முகம்..!

சுருக்கம்

அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சி.வி.சண்முகம் தகவல் தெரிவித்துள்ளார். 

அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சி.வி.சண்முகம் தகவல் தெரிவித்துள்ளார். 

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள்  சிறையில் இருந்த சசிகலா நேற்று பெங்களூருவிலிருந்து புறப்பட்டு இன்று சென்னை வந்தடைந்தார். அவருக்கு வழிநெடுக பிரம்மாண்டமாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பெங்களூருவிலிருந்து அதிமுக கொடி பொருத்திய தனது காரில் பயணம் மேற்கொண்டார். பின்னர், தமிழகம் எல்லை வந்த பிறகு அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது என  காவல்துறை எதிர்ப்பு தெரிவித்ததால் வேறு காருக்கு மாறினார்.

அந்த கார் அதிமுக நிர்வாகியுடையது என்பதால் அதிலும் அதிமுக கொடி பறந்தது. இதனால், அவரது காரில் இருந்து கொடியை அகற்ற முடியாத நிலை உருவானது.

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்;- அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்தியது சட்டவிரோதம். இது தொடர்பாக அவர் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

திமுகவில் நழுவும் பிடி..! திட்டம்போடும் கனிமொழி..! மட்டம் தட்டும் திமுக தலைமை..!
கொளத்தூரில் ஸ்டாலினுக்கு சிம்மசொப்பனம்..! கோட்டை விட்ட இபிஎஸ்... கொத்தாய் தூக்கிய விஜய்..!