திதி கொடுக்க இராமேஸ்வரம் போக. ரயில் கேட்ட எம்.பி.. தெற்கு இரயில்வே பொதுமேலாளருக்கு கடிதம்.

By Ezhilarasan BabuFirst Published Feb 9, 2021, 12:31 PM IST
Highlights

ஆடி அம்மாவாசை மற்றும் மாகாள்ய அம்மாவாசை , தை அம்மாவாசை போன்ற விசேஷ காலங்களில் சிறப்பு வண்டிகள் இயக்கப்பட்டு ரயில்பயணிகளுக்கு வசதிகள் செய்து தரப்படும். பேரூந்தில் செல்ல வேண்டுமெனில் மாட்டுத்தாவணி பேரூந்து நிலையம் சென்று அங்கிருந்து ராமேஸ்வரம் செல்ல ரூ120/- மேல் செலவாகும்.  

தை அமாவாசையை முன்னிட்டு மதுரை - இராமேஸ்வரம் இடையே பயணிகள் ரயிலை உடனடியாக இயக்க வேண்டும் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கோரிக்கை வைத்துள்ளார். தெற்கு இரயில்வே பொதுமேலாளருக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது. 

வரும் 11-02-2021 அன்று தை அம்மாவாசை ஆகும். இந்துக்கள் தங்களது மூதாதையர்களுக்கு காசி, ராமேஸ்வரம் போன்ற புன்னியஸ்தலங்களில் திதி கொடுப்பது வழக்கம்.கொரோனா காலத்திற்கு முன்பு மதுரையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு இரண்டு விரைவு ரயில்கள் உடன் மூன்று சாதாரண கட்டண ரயில்கள் காலை 6-45, காலை 12-45 மற்றும் மாலை 6-10 மணிக்கு என இயக்கப்பட்டது. ஆடி அம்மாவாசை மற்றும் மாகாள்ய அம்மாவாசை , தை அம்மாவாசை போன்ற விசேஷ காலங்களில் சிறப்பு வண்டிகள் இயக்கப்பட்டு ரயில் பயணிகளுக்கு வசதிகள் செய்து தரப்படும். 

பேரூந்தில் செல்ல வேண்டுமெனில் மாட்டுத்தாவணி பேரூந்து நிலையம் சென்று அங்கிருந்து ராமேஸ்வரம் செல்ல ரூ120/- மேல் செலவாகும்.  ஆனால் பயணிகள் ரயில் கட்டணம் ரூ45, விரைவு ரயில் கட்டணம் ரூ85 மட்டுமே.மதுரையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு நேரடி பயணிகள் ரயில்கள் தற்போது இல்லை. ராமேஸ்வரத்தில் இப்போது புனிதநீராட அனுமதி வழங்கப்பட்ட உள்ள நிலையில் ஏழை, எளிய மக்கள் பயணடையும் படி ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். 

 

click me!