ஸ்கெட்ச் போட்டு அடித்த மோடி.. உச்சத்தை தொட்ட ஜிடிபி.. ஆதாரங்களுடன் விளக்கும் அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்.

Published : Sep 02, 2021, 11:45 AM ISTUpdated : Sep 02, 2021, 12:10 PM IST
ஸ்கெட்ச் போட்டு அடித்த மோடி..  உச்சத்தை தொட்ட ஜிடிபி.. ஆதாரங்களுடன் விளக்கும் அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்.

சுருக்கம்

ஜூன் மாதம் காலாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி  சாதனை உச்சத்தை தொட்டுள்ளது. ஆனால் கடந்த ஆண்டு இதே நிலை மிக மோசமாக இருந்தது, நுகர்வோர் செலவினத்தில் எழுச்சியையும் இது பிரதிபலித்து இருக்கிறது. ஆகஸ்ட் 20, 25  ராய்ட்டர்ஸ் கருத்துக் கணிப்பு படி மொத்த உள்நாட்டு உற்பத்தி மூன்று மாத காலப்பகுதியில் 20.0%  அதிகரித்துள்ளது.

கொரோனா நோய்தொற்றுக்கு மத்தியிலும் மத்திய அரசின் வலுவான பொருளாதார கொள்கையின் எதிரொலியாக எப்போதும் இல்லாத அளவிற்கு இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் அபரிதமாக சாதனை படைத்திருக்கிறது என மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பெருமிதம் தெரிவித்துள்ளார். நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் இச்சாதனையை பாராட்டி வணங்குவதாகும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் இந்திய பொருளாதாரத்தின் அபரித வளர்ச்சி குறித்தும், இது தொடர்பாக வெளியாகியுள்ள ராய்ட்டர்ஸ் நிருவன கருத்து கணிப்பை செய்தியையும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஜூன் மாதம் காலாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி சாதனை உச்சத்தை தொட்டுள்ளது. ஆனால் கடந்த ஆண்டு இதே நிலை மிக மோசமாக இருந்தது, நுகர்வோர் செலவினத்தில் எழுச்சியையும் இது பிரதிபலித்து இருக்கிறது. ஆகஸ்ட் 20, 25  ராய்ட்டர்ஸ் கருத்துக் கணிப்பு படி மொத்த உள்நாட்டு உற்பத்தி மூன்று மாதகாலப்பகுதியில் 20.0%அதிகரித்துள்ளது. 

அதாவது கொரோனா வைரசின் கொடிய தாக்குதலுக்கு மத்தியிலும் இந்த பொருளாதாரம் ஏற்றம் கிடைத்துள்ளது. முதல் அலையை காட்டிலும், இரண்டாவது அலை இந்திய பொருளாதாரத்தை மிகக் கடுமையாக தாக்கியது, ஆனாலும் பொருளாதார சேதம் முன்பு எதிர்பார்த்ததைவிட குறைவாகவே இருந்தாக கணிக்கப்பட்டுள்ளது என பார்க்லேஸ்சின் தலைமை இந்திய பொருளாதார நிபுணர் ராகுல் பஜோரியா கூறியுள்ளார்.

மொத்தத்தில் கடந்த 1990 களின் நடுப்பகுதியில் அதிகாரப்பூர்வ காலாண்டு தரவு வெளியீடு தொடங்கியதிலிருந்து, இதுவே இந்தியாவின் வேகமான வளர்ச்சியாக கருதப்படுகிறது ன்ன அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்திய பொருளாதாரம் மீண்டு எழுவது குறித்து அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், பல்வேறு பொருளாதார குறியீட்டு வரைபடங்களையும், குறி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஜிவிஏ விகிதம் முதல் காலாண்டில் 18.8 சதவீதமாக வளர்ச்சி கண்டுள்ளது இது கடந்த ஆண்டில் -22.4  சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.  நாட்டில் தற்போது நிலவி வரும் கடுமையான நெருக்கடிக்கு மத்தியிலும் இந்த வளர்ச்சி விகிதமானது நாடு வளர்ச்சிப் பாதைக்கு திரும்பி கொண்டு இருப்பதை சுட்டிக்காட்டுகிறது என பொருளாதார வல்லுநர்கள் கூறியுள்ளதையும் அவர் மேற்கோள் காட்டியுள்ளார்.

நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் எதிர்பார்த்த அளவுக்கு 20.1 ஒரு சதவீதமாக வளர்ச்சி கண்டுள்ளது. இந்திய பொருளாதாரம் கொரனோ தொற்றுநோயின் தாக்கத்தில் இருந்து மீண்டு வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பியுள்ளது. இதனால் வளர்ச்சியில் ஒரு கூர்மையான அதிகரிப்பை அது கண்டுள்ளது. இதற்கு மத்திய அரசு எடுத்த சீர்திருத்த நடவடிக்கைகள், பொருளாதாரக் கொள்கைகள், கொரோனா தடுப்பூசி போடுதல் என பலவும் இந்த பொருளாதார வளர்ச்சிக்கு சாதமாக அமைந்துள்ளன. பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்டு வரும் இரட்டை இலக்க வளர்ச்சி இப்போது ஆரம்பமாகிவிட்டது, இந்த ஆண்டு முழுவதும் இரட்டை இலக்க வளர்ச்சி தொடருமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அவர்,வரி வருமானம் அதிகரிப்பு நிதி பற்றாக்குறையை குறைக்க மத்திய அரசின் பெட்ரோல் டீசல் விற்பனை மற்றும் இதர பிரிவுகளில் இருந்து கிடைக்கும் வருமானம் அதிகரித்துள்ள காரணத்தினால் பொருளாதார பற்றாக்குறையை ஈடுசெய்யமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

1.கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாவது அலை நாட்டையும், பொருளாதாரத்தையும் மிக கடுமையாக தாக்கிய நிலையிலும்  நமது பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட வேகமாக 20% அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளது. இது ஒரு காலாண்டில் இருந்து மற்றொரு காலண்டிற்கான வளர்ச்சியை மீட்டெடுப்பதாக  அமைந்துள்ளது.

2. அதேபோல விவசாயத்துறை முன்பு இருந்ததைக் காட்டிலும் அபரிதமான வளர்ச்சியை அடைந்துள்ளது, கொரோனாவுக்கு முந்தைய காலகட்டம், கொரோனாவுக்கு பிந்தைய காலகட்டம் என பிரித்துப் பார்த்தாலும் விவசாயத்த்துறையின் வளர்ச்சி அபரிதமாக உள்ளது. நரேந்திர மோடி தலைமையிலான அரசு கொண்டு வந்த விவசாய திட்டங்கள், அதற்கு விவசாயிகள் அளித்த பேராதரவு மூலம் இது சாத்தியமாகியுள்ளது. 

3. தற்போது நாட்டின் தொழில்துறை மற்றும் அதன் சேவை வலுவாக மீண்டு வருகிறது. ஆனால் இன்னும் கூட அதனுடைய வளர்ச்சி கொரோனாவுக்கு முந்தைய நிலைக்கு கீழே உள்ளது. இரண்டாவது அலை மிகக் கடுமையாக தொழில்துறையை பாதித்ததே அதற்கு காரணம், ஆனால் பதிவு செய்யப்படும் புதிய நிறுவனங்கள் வளர்ச்சி எதிர்பார்த்ததை விட வேகமாக உள்ளது. 

4. கொரோனா 3வது அலையே கட்டப்படுத்த வேண்டும்: தற்போதுள்ள நிலையை தக்கவைக்க வேண்டும் எனில் கொரோனா மூன்றாவது அலையை நாம் கட்டுப்படுத்தியே ஆகவேண்டும். முதல் இரண்டு அலைகளின் தாக்கம் GAVயில் தீவிரமாக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு நிறுவனத்தின் செயல்பாடு மற்றும் அதன் லாபத்தை கடந்த இரண்டு ஆண்டுகளாக மீண்டுவர முடியாத அளவுக்கு தாக்கியதில் மூலம் நிறுவனங்களின் பங்கு வருவாய் மோசமாகி உள்ளது. நாம் தொடர்ந்து கடுமையாக உழைப்பதன் மூலம் அதை மீட்க முடியும்.

5. கடந்த 18 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடந்த ஜூலை மாதத்தில் வரிவசூல் அதிகளவில் நடந்துள்ளது. கடந்த 7 ஆண்டுகளாக நரேந்திர மோடி அரசு வரி வசூலில் எவ்வளவு தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததே, இந்த நடவடிக்கையின் மூலம், இந்தியா பொருளாதாரம் வலுவான நிலையை எட்டியுள்ளது. இது நாட்டை வளர்ச்சிப் பாதையை நோக்கி நகர்த்துகிறது என அவர் பதிவிட்டுள்ளார். 
 

PREV
click me!

Recommended Stories

நாளை தவெக வில் சேருகிறார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்..! டெல்டாவை தட்டி தூக்க பக்கா ஸ்கெட்ச்
ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!