​மகள் திருமணத்தை வைத்து கொண்டு ஓபிஎஸ் வீட்டு துக்கத்தில் பங்கெடுத்த டிடிவி.. கையை பிடித்து ஆறுதல்..!

Published : Sep 02, 2021, 11:28 AM IST
​மகள் திருமணத்தை வைத்து கொண்டு ஓபிஎஸ் வீட்டு துக்கத்தில் பங்கெடுத்த டிடிவி.. கையை பிடித்து ஆறுதல்..!

சுருக்கம்

விஜயலட்சுமியின் உடல் சென்னையில் இருந்து அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பெரியகுளத்தில் இருக்கும் ஓ.பன்னீர்செல்வத்தின் பழைய வீட்டில் விஜயலட்சுமியின் உடல் வைக்கப்பட்டது. அங்கே ஏராளமான தொண்டர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  

பெரியகுளத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உடலுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். 

தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமிக்கு அதிகாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், சசிகலா உள்ளிட்டோர் பன்னீருக்கு ஆறுதல் தெரிவித்து. அவரது மனைவிக்கு அஞ்சலி செலுத்துவிட்டு சென்றனர்.

இந்நிலையில் நேற்று பிற்பகல் விஜயலட்சுமியின் உடல் சென்னையில் இருந்து அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பெரியகுளத்தில் இருக்கும் ஓ.பன்னீர்செல்வத்தின் பழைய வீட்டில் விஜயலட்சுமியின் உடல் வைக்கப்பட்டது. அங்கே ஏராளமான தொண்டர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  

இந்நிலையில், நேற்று இரவு 11 மணிக்கு டிடிவி.தினகரன் பெரியகுளத்தில் இருக்கும் ஓபிஎஸ் வீட்டுக்குச் சென்று அவரது மனைவிக்கு அஞ்சலி செலுத்தினார். இதனையடுத்து, அவரை கண்டதுமே ஓபிஎஸ் அழ தொடங்கினார். பின்னர், அவரது கைகளை பிடித்து டிடிவி.தினகரன் ஆறுதல் கூறிவிட்டு சென்றார். டிடிவி தினகரனின் மகளுக்கு வரும் செப்டம்பர் 15ம் தேதி திருமணம் வைத்துக்கொண்டு துக்க நிகழ்வுகளில் கலந்து கொண்டது அனைவரையும் வியப்படைய செய்துள்ளது. 

PREV
click me!

Recommended Stories

234 தொகுதிகளுக்கும் விருப்பமனு..! முதல் கட்சியாக அறிவிப்பு வெளியிட்ட காங்கிரஸ்..
டெல்டாவை தட்டி தூக்கிய விஜய்.. செங்கோட்டையனின் மாஸ்டர் பிளான் சக்சஸ்..? தவெகவில் மேலும் ஒரு அமைச்சர்