பஞ்சாப்பில் நடந்த மோடியின் பாதுகாப்பு மீறல்... ஆளே இல்லாமல் நடக்க இருந்த பேரணி... காங்கிரஸ் கடும் காட்டம்..!

By Thiraviaraj RMFirst Published Jan 6, 2022, 3:14 PM IST
Highlights

பஞ்சாப் காங்கிரஸ் கட்சியினர் கூறுகையில், “70,000 நாற்காலிகள் போடப்பட்டிருந்தும் 700 பேர் மட்டுமே பங்கேற்க இருந்தனர். 
 

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, பிரதமர் நரேந்திர மோடியின் மாநில பயணத்தின் போது கூறப்படும் பாதுகாப்பு மீறல் வெறும் குற்றச்சாட்டு. அங்கு ஆட்கள் இல்லாமல் வெற்று நாற்காலிகள் இருந்ததால் மோடி இந்த விவகாரத்தை திசை திருப்பியுள்ளார்.

பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி கூறிய கருத்தை எதிரொலித்த சித்து, பிரதமர் மோடி பங்கேற்கவிருந்த ஃபெரோஸ்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் நாற்காலிகள் காலியாக இருந்ததைத் திசை திருப்ப, பாதுகாப்பை வேண்டுமென்றே பிரச்சினை ஆக்குகிறார்கள் என்றார்.

முன்னதாக, ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசிய முதல்வர் சரண்ஜித் சன்னி, ஃபெரோஸ்பூருக்குச் செல்லும் வழியில் ஒரு மேம்பாலத்தில் அவரது கான்வாய் சிக்கித் தவித்தபோது, ​​பிரதமரின் உயிருக்கு பாதுகாப்பு குறைபாடு அல்லது அச்சுறுத்தல் இல்லை என்று மறுத்தார். பஞ்சாப் முதல்வர், “பிரோஸ்பூர் பொதுக்கூட்டத்தில் பாஜகவின் பொதுப் பேரணியில் 70,000 நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. ஆனால் 700 பேர் மட்டுமே பாஜக நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். இதில் நான் என்ன செய்ய முடியும்?” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையில், பஞ்சாப் காங்கிரஸ் கட்சியினர் கூறுகையில், “70,000 நாற்காலிகள் போடப்பட்டிருந்தும் 700 பேர் மட்டுமே பங்கேற்க இருந்தனர். பஞ்சாபில் நடந்த பேரணியில் கலந்து கொள்ள யாரும் வராததால், பிரதமர் மோடியின் ஈகோ பாதிக்கப்பட்டது. ஒரு வருடத்திற்கும் மேலாக விவசாயிகளை மோடி சந்திக்கவில்லை. அதனால், தான் பஞ்சாபிகளும் மோடியின் பேச்சை கேட்க வரவில்லை. பஞ்சாபில் நடந்த பேரணி தோல்வியடைந்தது என்ற உண்மையை மறைக்க பாஜக முயற்சிக்கிறது”என்று பஞ்சாப் காங்கிரஸ் தொடர்ச்சியான ட்வீட்களில் தெரிவித்துள்ளது.

 விவசாயிகளின் போராட்டத்திற்கு மத்தியில் பிரதமர் மோடி மேம்பாலத்தில் சிக்கித் தவித்ததாகக் கூறப்படும் குறைபாடுகள் குறித்து "முழுமையான விசாரணை" நடத்த இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட உயர்மட்டக் குழுவை பஞ்சாப் அரசு அமைத்துள்ளது. பஞ்சாபில் ஆளும் காங்கிரஸ் பிரதமரை "உடல்ரீதியாக காயப்படுத்த முயன்றது" என்று பாஜக குற்றம் சாட்டிய இந்த சம்பவம் ஒரு அரசியல் சூழலைத் தூண்டியுள்ளது. அதே நேரத்தில் மற்ற கட்சிகளும் சட்டம் ஒழுங்கு பிரச்சினையில் பஞ்சாப் மாநில அரசை பாஜக குற்றம்சாட்டி வருகிறது.

click me!