மக்களே உஷார்.. வரும் 10 தேதி வரை நிலவரம் வேற மாதிரி இருக்கும்... 9 தேதி ரொம்ப எச்சரிக்கையா இருங்க..

Published : Jan 06, 2022, 03:06 PM ISTUpdated : Jan 06, 2022, 03:07 PM IST
மக்களே உஷார்..  வரும் 10 தேதி வரை நிலவரம் வேற மாதிரி இருக்கும்... 9 தேதி ரொம்ப எச்சரிக்கையா இருங்க..

சுருக்கம்

10.01.2022: வடகடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கன மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள்மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.  

06.01.2022,  07.01.2022: தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 08.01.2022: தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். இலங்கையை ஒட்டி உருவாகவுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 

09.01.2022: தென் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழையும், டெல்டா மாவட்டங்கள், கடலூர் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசான மழையும் பெய்யக்கூடும் என்றும் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

10.01.2022: வடகடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கன மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள்மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும். மூடுபனி எச்சரிக்கை : 06.01.2022, 07.01.2022: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் காலை நேரங்களில் இலேசான பனிமூட்டம் காணப்படும். சென்னையை பொறுத்தவரை  அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29  குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும். 

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):  ஏதுமில்லை மீனவர்களுக்கான எச்சரிக்கை: 06.01.2022: குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரியகையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!